தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெஸ்லே ஆட்குறைப்பு: உலகளவில் பாதிப்பு

1 mins read
2f81f08b-dc03-4a31-b78d-92f31baa0304
நெஸ்லே நிறுவனம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

நெஸ்லே நிறுவனம் 16,000 பேரை ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதனால் அடுத்த ஈராண்டுகளில் உலகளவில் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த நெஸ்லே பேச்சாளர் ஒருவர், ஒவ்வொரு சந்தையும் வெவ்வேறு விதத்தில் பாதிப்படையும் என்று கூறினார். தங்களுக்கு உகந்த திட்டத்தை வரையவேண்டும் என்று அவர் சுட்டினார்.

“தற்போதைக்கு எங்களால் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைத் தர இயலாது. பல்வேறு சந்தைகளில் உள்ள செயல்பாட்டுக் குழுக்களுடன் ஆலோசனை செய்து ஆட்குறைப்புத் திட்டம் வரையப்படும்,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

உலகளவில் ஒட்டுமொத்த நெஸ்லே ஊழியர்களில் ஆறு விழுக்காட்டினர் ஆட்குறைப்பால் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பலதரப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 12,000 அலுவலக ஊழியர்களும் அடங்குவர்.

இதர 4,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்படுவது, நெஸ்லேயின் உற்பத்தி, விநியோகச் சங்கிலிப் பிரிவுகளில் இடம்பெற்றுவரும் மாற்றங்களினால் மேற்கொள்ளப்படுவது.

நெஸ்பிரெசோ, மைலோ, கிட்கேட் (KitKat) உள்ளிட்ட நெஸ்லேயின் உணவுப் பொருள்கள் 185 நாடுகளில் விற்கப்படுகின்றன. 75 நாடுகளில் இருக்கும் 330க்கும் மேற்பட்ட ஆலைகளில் நெஸ்லே செயல்படுகிறது.

நெஸ்லேயின் சிங்கப்பூர் கிளையில் இன்னும் 15க்கும் அதிகமான வேலைகளுக்கு அந்நிறுவனம் ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

குறிப்புச் சொற்கள்