தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கும் நெட்சின் புதிய செயலி

1 mins read
9e336c3a-614b-44a1-8b17-1a2e2ad80863
‘Nets SoftPOS’ என்று அழைக்கப்படும் அந்த செயலி ‘கூகள் பிளே ஸ்டோரில்’ உள்ளது.  - படம்: நெட்ஸ்

சிங்கப்பூரில் இனி தொடர்பில்லா கட்டண முறை பல இடங்களில் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் ‘நெட்ஸ்’ நிறுவனம் தற்போது புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் வேகமாக மின்னிலக்க சாதனங்கள் வழி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

‘Nets SoftPOS’ என்று அழைக்கப்படும் அந்த செயலி ‘கூகள் பிளே ஸ்டோரில்’ உள்ளது. அதை வியாபாரிகள் தங்களது கைப்பேசி உள்ளிட்ட மின்னிலக்க சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வங்கி அட்டைகள், கியூ ஆர் குறியீடுகள், கைப்பேசி வழி பணப்பரிவர்த்தனை என பல அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வியாபாரிகளிடம் பணம் செலுத்த முடியும்.

தற்போது ஆன்டிரைட் வகை கைப்பேசிகளில் இச்சேவை செயல்படும். ‘ஆப்பிள்’ சாதனங்களுக்கான செயலி எப்போது வெளியாகும் என்பது குறித்து நெட்ஸ் தகவல் வெளியிடவில்லை.

புதிய செயலியில் உள்ளூர் வங்கிகளின் அட்டைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சில பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமும் புதிய செயலி வழி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

நெட்ஸ் வழி 100 வெள்ளிக்கு மேல் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என்றால் வங்கி அட்டையின் கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

குறிப்புச் சொற்கள்