எஸ்ஜேஐ பாலர் பள்ளியில் புதிய இருமொழிப் பிரிவு அறிமுகம்

ஆங்கில, சீன இருமொழிக் கற்றல்

எஸ்ஜேஐ பாலர் பள்ளியில் புதிய இருமொழிப் பிரிவு அறிமுகம்

படம்: எஸ்ஜெஐ

11 Nov 2026 - 2:28 pm

1 mins read

செயிண்ட் ஜோசஃப் இன்டர்நே‌‌ஷனல் (எஸ்ஜேஐ)  அனைத்துலக பாலர் பள்ளி  300க்கும் மேற்பட்ட இடங்களாக விரிவடைவதால், இரண்டாவது இருமொழிப் பிரிவை வழங்கவுள்ளது.

2027ஆம் ஆண்டு முதல், குடும்பங்கள் இதையோ அல்லது இரண்டு ஆசிரியர்கள் வகுப்பறை ஒன்றைப் பகிர்ந்துகொண்டு, ஒருவர் ஆங்கிலத்திலும் மற்றொருவர் சீன மொழியிலும் கற்பிக்கும் தற்போதைய பிரிவையோ தேர்ந்தெடுக்கலாம்.

இந்தப் பாலர் பள்ளியின் இருமொழித் திட்டமானது, மொழிகளை  பாடங்களாகக் கற்பிப்பதற்குப் பதிலாக, பாடங்களை ஆங்கில, சீன மொழியில் கற்பிப்பதைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நன்கு நிறுவப்பட்ட இணை கற்பித்தல் இருமொழிப் பிரிவில், இரண்டு ஆசிரியர்கள் ஒரே வகுப்பறையில் இணைந்து பணியாற்றுகின்றனர், ஒருவர் ஆங்கிலத்திலும் மற்றொருவர் சீன மொழியிலும் கற்பிக்கின்றனர்.

2027 முதல், குடும்பங்களுக்கு இருவழி உள்ளார்ந்த இருமொழிப் பிரிவு அறிமுகப்படுத்தப்படும்.

இதில் பிள்ளைகள் வெவ்வேறு நாள்களில் ஒவ்வொரு மொழியிலும் முழுமையாகக் கற்பார்கள் என இது தொடர்பான கட்டுரை வெளியீடு ஒன்றில் பள்ளி குறிப்பிட்டது

ஒவ்வொரு மொழிக்கும் உயிர் கொடுக்கும் கலாசாரங்கள், மரபுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் சிறப்பு கற்றல் சூழல்கள் இந்த அனுபவத்தை மேம்படுத்துவதாகப் பள்ளி கூறியது.

குறிப்புச் சொற்கள்