தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்துக்குப் புதிய தலைவர்

1 mins read
1798a159-33b7-40e8-a0b7-2269a303752a
நவம்பர் 1 முதல் திரு இங் செர் போங் (இடது) ஐஎம்டிஏயின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்பார். திரு இங் வகித்த தேசிய நூலக வாரியத் தலைமை நிர்வாகி பொறுப்பை நவம்பர் 1ஆம் தேதி திருமதி மெலிசா-மே டாம் ஏற்றுக்கொள்வார். - படங்கள்: தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்

திரு இங் செர் போங், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தேசிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பக வாரியத்தின் தலைமை நிர்வாகியாக உள்ள திரு இங், அக்டோபர் 15 முதல் ஆணையத்தின் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு செப்டம்பர் 23ஆம் தேதி அறிவித்தது.

ஆணையத்தின் தற்போதைய தலைமை நிர்வாகியாக உள்ள 49 வயது திரு லியூ சுவேன் யோங்குக்குப் பதிலாக திரு இங் புதிய பொறுப்பை நவம்பர் 1ஆம் தேதி முழுமையாக ஏற்றுக்கொள்வார்.

திரு இங் வகித்த தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவிருக்கும் 54 வயது திருமதி மெலிசா-மே டாம், அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்காலிக தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, பின்னர் நவம்பர் 1ஆம் தேதி முழுமையாக அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

குறிப்புச் சொற்கள்