ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜேடிசி கார்ப்பரேஷன் கழகத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக திருவாட்டி ஜேக்லின் போ பொறுப்பேற்றுக்கொள்வார்.
வர்த்தக, தொழில்துறை அமைச்சு, பிப்ரவரி 21 அன்று வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில், சிங்கப்பூரின் தொழில்துறை முன்னேற்றத்திற்குப் பொறுப்பான சட்டபூர்வ கழகத்தில் திரு டான் பூன் கைக்குப் பதிலாக திருமதி ஜேக்லின் போ பொறுப்பேற்பார் என்று அறிவித்தது.
மார்ச் 1 முதல் JTC கழக இயக்குநர் சபை உறுப்பினராக திருவாட்டி போ நியமிக்கப்படுவார்.
திருவாட்டி போ, அக்டோபர் 2021 முதல் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் (இடிபி) நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் கொவிட்-19 தொற்றுநோய் காலத்துக்குப் பிந்திய சிங்கப்பூரின் பொருளியல் மீட்சியின்போது பல்வேறு முதலீடுகளை அவர் சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
திரு டான், 51, ஜேடிசி கழகத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து மார்ச் 31ஆம் தேதி அதிபாரபூர்வமாக விலகுவார் என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்தது.
திரு டான் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில், பொங்கோல் மின்னிலக்க மாவட்டம், கிளீன்டெக் த்ரீ, ஜூரோங் புத்தாக்க மாவட்டம், உட்லண்ட்ஸ் நார்த் கோஸ்ட் உள்ளிட்ட பல புதிய பேட்டைகள், கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

