தேசிய கலை மன்றத்துக்குப் புதிய தலைமை நிர்வாகி

1 mins read
acb4c0e6-3bf2-4027-b94a-42a875c64ae1
தேசிய கலை மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு லோ எங் தியோங்கிற்குப் பதிலாகத், தற்காப்பு அமைச்சின் துணைச் செயலாளர் எலைன் இங் (இடது) பதவியேற்பார். - படங்கள்: தேசிய கலை மன்றம்

தேசிய கலை மன்றத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகத் திருமதி எலைன் இங், மார்ச் 1, 2026 முதல் செயல்படுவார்.

தற்போது தேசிய கலை மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் திரு லோ எங் தியோங்குக்குப் பதிலாக திருவாட்டி இங் பொறுப்பேற்பார் என்றும் திரு லோ 2026, பிப்ரவரி 28ஆம் தேதியன்று பதவி விலகுவார் என்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்தது.

திருமதி இங், முதலில் ஜனவரி 1, 2026 முதல் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் (நியமிக்கப்பட்டவர்) செயல்படுவார்.

அவர் தற்போது தற்காப்பு அமைச்சில் துணைச் செயலாளராக (நிர்வாகம்) உள்ளார். இந்தப் பதவியை அவர் நவம்பர் 2019 முதல் வகித்து வருகிறார்.

தற்காப்பு அமைசச்சின் பதவிக்காலத்திற்கு முன்பு, திருமதி இங் தேசிய மரபுடைமைக் கழகத்தின் துணை தலைமை நிர்வாகியாகவும், தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார்.

பதவி விலகும் தலைமை நிர்வாக அதிகாரி திரு லோ, சிங்கப்பூரின் கலை, கலாசாரக் கொள்கைகளுக்கான வரைபடத்தை உருவாக்குவதற்கு ஆதரவளித்தார். கலைத் துறையில் மின்னிலக்கப் பயன்பாட்டை வலுப்படுத்தவும், தெளிவான தொழில்முறை பயிற்சிப் பாதைகளை உருவாக்கவும், பார்வையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்தவும் முயற்சிகளை முன்னெடுத்தார்.

கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ, வெளியேறும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு நன்றி தெரிவித்து, புதிய தலைமை நிர்வாகியை வரவேற்றார்.

குறிப்புச் சொற்கள்