தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்தோருக்கு இலவச பராமரிப்புச் சேவை வழங்கும் புதிய சமூக மருந்தகம்

1 mins read
dc08415a-ae83-437b-8fb8-e555be507d05
பீச் ரோட்டில் அமைந்துள்ள சாட்டா காம்ஹெல்த் சமூக மருந்தகம் அதிகாரபூர்வமாக அதன் கதவுகளைத் திறந்தது. - படம்: சாவ்பாவ்

பீச் சாலையில் இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் அடிப்படைப் பராமரிப்புச் சேவை வழங்கும் சாட்டா காம்ஹெல்த் சமூக மருந்தகத்தை நாடிவரும் மூத்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மருந்தகம் அருகில் உள்ள வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்தோருக்குச் சேவை வழங்குகிறது.

பராமரிப்புச் சேவைகளுக்காக மருந்தகத்துக்கு வரும் 1,000 பேரில் 66 விழுக்காட்டினர் வசதி குறைந்த பின்னணியைச் சேர்ந்தோர்.

சாட்டா காம்ஹெல்த் சமூக மருந்தகம் குடியிருப்பு வீடுகளுக்கு நடுவில் அமைந்திருப்பதால் அனைவரும் எளிதில் சேவை பெறமுடியும் என்றார் மத்திய வட்டார மேயர் டெனிஸ் புவா.

சாஸ் அட்டைகளையும் மருந்தகத்தில் பயன்படுத்த முடிவதால் சேவைகள் இன்னும் மலிவாகின்றன என்றார் அவர்.

2024ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்னோட்டமாகத் தொடங்கிய மருந்தகத்துக்கு டிசம்பர் இறுதிக்குள் சுமார் 520 குடியிருப்பாளர்கள் வந்துசென்றனர்.

பீச் சாலையில் உள்ள மருந்தகத்தை சாட்டா காம்ஹெல்த்தும் சிங்ஹெல்த்தும் இணைந்து அமைத்தன.

பீச் சாலை வட்டாரத்தில் 25 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் மூத்தோர் என்று சாட்டா காம்ஹெல்த் தலைமை நிர்வாகி டாக்டர் கெல்வின் புவா குறிப்பிட்டார்.

மருந்தகத்தின் மருத்துவர்களும் தாதிகளும் மேம்பட்ட பராமரிப்புத் திட்டத்தில் இணைந்திருப்பது, நீடித்த அதிகாரப் பத்திரம் வைத்திருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மூத்தோருக்கு எடுத்துரைக்கின்றனர்.

அடுத்த சில மாதங்களில் மருந்தகத்துக்கு வரும் மூத்தோர் எண்ணிக்கை 40லிருந்து 50க்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின் சுவி சாலை வட்டாரத்தில் இதுபோன்ற மருந்தகத்தை உருவாக்க சாட்டா காம் ஹெல்த் திட்டமிடுகிறது.

குறிப்புச் சொற்கள்