புதிய டெங்கி தடுப்பூசி சோதனை: சிறார் பங்கேற்பாளர்கள் சேர்ப்பு

2 mins read
38b8b95b-876f-46c7-8a24-f3af483bfdef
புதிய டெங்கி தடுப்பூசிக்கான ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் துணைப் பேராசிரியர் சியா போ யிங் (இடது), டாக்டர் சோங் யூஜியா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் புதிய டெங்கி தடுப்பூசி ஒன்றின் சோதனைக்காக இரண்டிலிருந்து 17 வயதுக்கு உட்பட்டோர் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த குவாட்டிவெலன்ட் (quadrivalent) ரக டெங்கி தடுப்பூசிக்கான மருத்துவச் சோதனை மூன்றாம் கட்டத்தில் உள்ளது. அமெரிக்காவில் இயங்கும் எம்எஸ்டி மருந்து நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது.

நான்கு வகை டெங்கி கிருமிகளுக்கும் எதிர்ப்பு சக்தி உருவாக்க ‘வி181’ (V181) என்றழைக்கப்படும் ஒருமுறை போடப்படும் இந்தத் தடுப்பூசியின் இலக்காகும்.

பொதுவாக மூன்றாவது கட்டம்தான் மருந்துச் சோதனையின் இறுதிக் கட்டமாகும். அதற்குப் பிறகு பயன்பாட்டுக்கு அனுமதி பெற அந்த மருந்து அதிகாரிகளிடம் அனுப்பப்படும்.

நான்கு வகை டெங்கி கிருமிகளின் வலுவிழந்த வடிவங்களைக் கொண்டு வி181 தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரில் அதன் ஆய்வின் மூத்த ஆய்வாளரான சியா போ யிங் தெரிவித்தார்.

“நான்கு வகை டெங்கி கிருமி வகைகளையும் பயன்படுத்துவதன் மூலம் மனித உடல் வருங்காலத்தில் டெங்கி எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ளும்,” என்றார் பேராசிரியர் சியா. அவர், தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் ஆய்வு அலுவலகத் தலைவராகவும் பொறுப்பி வகிக்கிறார்.

வி181 தடுப்பூசிக்கான சோதனையை நடத்த சிங்கப்பூரில் ஆரோக்கியமாக இருக்கும் குறைந்தது 700 சிறார், பதின்ம வயதினரைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டெங்கி நோய்க்கு ஆளானவர்கள், ஆளாகதவர்கள் இரு தரப்பினரையும் சோதனையில் சேர்த்துக்கொள்வது எண்ணம் என்று ஆய்வின் மற்றொரு ஆய்வாளரான சோங் யூஜியா.

வி181 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் அதிக வீறியம் இல்லாதவை என்றும் அவை அதிக காலம் தொடர்வதில்லை என்றம் பேராசிரியர் சியா குறிப்பிட்டார். தசை வலி, களைப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்