சிங்கப்பூரில் எளிதில் அகற்றக்கூடிய தலைக்கவசம் விரைவில் அனுமதிக்கப்படவிருக்கிறது. அத்தகைய தலைக்கவசத்தில் தாடையில் கட்டப்படும் பட்டை எளிதில் அகற்றக் கூடியதாக இருக்கும்.
மோட்டார்சைக்கிள் தலைக்கவசத்திற்கான தரம் திருத்தப்பட்டது குறித்து சென்ற அக்டோபர் 19ஆம் தேதி சாங்கி கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சோதனையில் வெற்றி பெற்றால் அத்தகைய தலைக்கவசத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகளில் மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் பயன்படுத்துவதற்கு முன்பு தலைக்கவசம் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தற்போது, சோதனைகளில் தாடை பட்டைகளின் வலிமை மற்றும் தலைக்கவச ஊடுருவலுக்கான தலைக்கவசங்களின் வலிமை உள்ளிட்டடவை சோதிக்கப்படுகின்றன.
திருத்தப்பட்ட தரநிலைகள் வர்த்தக நிறுவனமான எண்டர்பிரைஸ் சிங்கப்பூரின் தரநிலைப் பிரிவால் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் மற்றும் போக்குவரத்து காவல்துறையிடம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டபோது, திருத்தப்பட்ட தரநிலைகள் எப்படி அல்லது எப்போது அமலாக்கப்படும் என்பதை அவை வெளியிடவில்லை.