தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டடங்களின் வெள்ளக்கால மீள்திறனை மேம்படுத்தும் கையேடு

1 mins read
8b287906-6868-47e1-a287-eba583b2f73b
ஈசூன், ஹாலந்து, புக்கிட் தீமா, மவுண்ட் பேட்டன் ஆகிய பகுதிகளில் அண்மை மாதங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான யோசனைகளைக் கட்டட உரிமையாளர்களும் மேம்பாட்டாளர்களும் புதிய கையேடு ஒன்றிலிருந்து பெற முடியும்.

2026ன் முதல் அரையாண்டுக்குள் கையேடு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப் பயனீட்டுக் கழகத்தால் வெளியிடப்படவுள்ள இந்தக் கையேடு, மழை மற்றும் கடலோர வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு நில உரிமையாளர்களும் தொழில்துறை நிபுணர்களும் எந்தெந்த முறைகளைக் கையாளலாம் என்பதைப் பரிந்துரைக்கும்.

11 உறுப்பினர்கள் கொண்டுள்ள கூட்டணிச் செயற் குழுவுடன் இந்தக் கையேடு இணைந்து அமைக்கப்படும் என்று பொதுப்பயனீட்டுக் கழகம், மே 20ஆம் தேதியின்போது கூறியது. உறுப்பினர்களின் துறை சார்ந்த அனுபவமும் அதன் குழு உறுப்பினர்களின் நிபுணத்துவமும் கையேட்டின் உருவாக்கத்திற்குத் துணையாற்றும்.

மே 19ஆம் தேதியன்று அமைக்கப்பட்ட இந்தச் செயற்குழுவில் கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள், மேம்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.

சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கான ஒடுக்கீட்டு விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட இந்தக் கையேடு, பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கடலோரப் பாதுகாப்பிற்கான நடைமுறை கோட்பாட்டுக்கு ஒத்துப்போகக்கூடியதாக இருக்கும்.

2026ன் முதல் காலாண்டில் இந்தச் செயற்குழு தனது பரிந்துரைகளை நிறைவேற்றும் என்று தெரிவித்த பொதுப்பயனீட்டுக் கழகம், 2026ன் நடுப்பகுதிக்குள் கையேடு வெளியிடப்படும் என்று தெரிவித்தது.

வெள்ளத்திற்கு எதிரான மீள்திறன் கொண்டுள்ள கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் தொடர்பில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கையேடுகளை வெளியிட்டன.

சிங்கப்பூருக்குப் பொருத்தமான கையேட்டைப் புனையும்போது மேற்கூறப்பட்ட கையேடுகளைச் செயற்குழு மேற்கோள்களாகக் கொள்ளும்.

குறிப்புச் சொற்கள்