சிங்கப்பூரில் அடுத்த கல்வியாண்டில் 46 பள்ளிகளுக்கு புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் முதல்முறையாக தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்கின்றனர்.
கல்வி அமைச்சின் நியமனம் மற்றும் சுழற்சி திட்டத்தின் கீழ் அது செயல்படுத்தப்பட்டுள்ளது.
46 பள்ளிகளில் 22 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள். மற்ற 24 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகும்.
“நியமனம் மற்றும் சுழற்சி திட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு மாற்றப்படுவது பல நன்மைகளைத் தரும். தலைமை ஆசிரியர்கள் அவர்களின் அனுபவத்தையும் சிறந்த வழிமுறைகளையும் புதிய பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வார்கள் அது பள்ளிகளுக்கு பெரிய அளவில் உதவும்,” என்று கல்வியமைச்சு அக்டோபர் 9ஆம் தேதி (புதன்கிழமை) தெரிவித்தது
டிசம்பர் 27ஆம் தேதி புதிய தலைமை ஆசிரியர்களுக்கு நியமன நிகழ்ச்சி நடக்கும்.

