தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பரில் மந்தமான புதிய தனியார் வீட்டு விற்பனை

2 mins read
1d61403a-c704-4419-84a7-90a85a6b4eb0
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் புதிய தனியார் வீட்டு விற்பனை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: சாவ்பாவ்

செப்டம்பர் மாதத்தில் புதிய தனியார் வீட்டு விற்பனை கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தது.

எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் (இசி) தவிர்த்து மொத்தம் 255 புதிய வீடுகள் ஆகஸ்டில் பரிவர்த்தனை செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்ட 2,142 வீடுகளைவிட இது 88 விழுக்காடு குறைவு. ஆண்டு அடிப்படையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 401 வீடுகளைவிட 36 விழுக்காடு குறைந்தது.

இந்த மாதத்தில் 20 புதிய வீடுகளே அறிமுகமானதும் இதற்கு ஒரு காரணம். ஆகஸ்ட் மாதத்தில் 2,496 புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

எனினும், அக்டோபரில் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என்று சொத்து மேம்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹாலந்து வட்டாரத்தில் இந்த மாதம் அறிமுகமான ‘ஸ்கை’ திட்டத்தில் கிட்டத்தட்ட 99 விழுக்காடு அல்லது 666 வீடுகளில் 658 வீடுகள் சராசரியாக சதுர அடிக்கு $2,953 விலையில் விற்கப்பட்டன.

குறைந்த வட்டி விகிதங்களும் விற்பனையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாத புதிய தனியார் வீட்டு விற்பனையுடன் மூன்றாம் காலாண்டின், இசி தவிர்த்த ஒட்டுமொத்த புதிய தனியார் வீட்டு விற்பனை 3,337 ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய காலாண்டில் விற்பனையான 1,212 வீடுகளைவிட இது மூன்று மடங்கு ஆகும்.

2025ன் முதல் ஒன்பது மாதங்களில் 7,924 புதிய வீடுகள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன. 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளின் ஆண்டு விற்பனையைவிட இது சிறப்பானது.

இந்த விற்பனை வேகம் தொடர்ந்தால், 2025க்கான புதிய வீட்டு விற்பனை, முந்தைய 8,000 முதல் 9,000வரை எனும் கணிப்பைவிட அதிகமாக 9,000 முதல் 10,000வரை எட்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நிச்சயமற்ற பொருளியல், புவிசார் அரசியல் பதற்றங்கள் இருந்தபோதிலும், குறைந்த வட்டி விகிதம், எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பான உள்ளூர் பொருளியல் செயல்திறன் ஆகியவற்றால் வீட்டு விற்பனை சிறப்பாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்