செயற்கை இறைச்சி கெடாமல் பாதுகாக்க புதிய திட்டம் இலக்கு

ஆய்வகத்தில் செயற்கையாக இறைச்சி உற்பத்தி செய்யும் பணி வேகமெடுக்கத் தொடங்கியுள்ள வேளையில், அந்த மாற்றுப் புரத உணவைக் கெடாமல் பாதுகாக்க புதியதொரு திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

‘செல்லேஜ்’ எனும் ‘அடுத்த தலைமுறை உயிரணு வேளாண்மைக்கான உயிர்ப்பொறியியல் கருவிகள்’ திட்டமானது, உயிரணு சார்ந்த உணவுப்பொருள் உற்பத்தியின்போது நுண்ணுயிர்களால் அது மாசடைவதை தொடக்கத்திலேயே கண்டறியும் உணர்கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், நுண்ணுயிர்க்கொல்லிகளின் துணையின்றி அத்தகைய மாசுபாட்டைத் தடுப்பதற்கான பொருள்களை உருவாக்கவும் அது இலக்கு கொண்டுள்ளது.

“இம்முயற்சி வெற்றியடைந்தால், மாற்று உணவுப்பொருள்களின் உற்பத்தியையும் தரத்தையும் கூட்ட முடியும்; செலவையும் குறைக்க முடியும்,” என்று துணைப் பிரதமர் ஹெங் சுவி கியட் குறிப்பிட்டார்.

‘நீடித்து நிலைக்கத்தக்க நகரங்களுக்கான அறிவியல்’ எனும் கருப்பொருளுடன் இடம்பெற்ற ‘கிரியேட்’ கருத்தரங்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் மற்ற ஆராய்ச்சி நிலையங்களுடன் இணைந்து இந்த ‘செல்லேஜ்’ திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

தேசிய ஆய்வு நிறுவனம் தனது ஆய்வு உன்னத, தொழில்நுட்ப முனைப்பு அனைத்துலக வளாக (கிரியேட்) அமைப்பின் மூலம் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகிறது.

அண்மைய ஆண்டுகளாக நீடித்து நிலைக்கத்தக்க நகரங்கள் தொடர்பான மேம்பாட்டுப் பணிகளில் ‘கிரியேட்’ அமைப்பு கவனம் செலுத்தி வருவதற்கு ‘செல்லேஜ்’ திட்டமே சான்று என தேசிய ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங் குறிப்பிட்டார்.

“இந்நூற்றாண்டு இறுதிக்குள், நகரமயமாதலின் விளைவாக உலக மக்கள்தொகையில் பெரும்பாலோர் பெருநகரங்களிலேயே வாழ்வர். சிங்கப்பூரில் சோதித்துப் பார்க்கப்படுவது உலகிற்கும் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார் திரு ஹெங்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ‘பல்கலைக்கழக நகரில்’ இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.

“சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பிற்கு ஆய்வக இறைச்சி உற்பத்தித் துறை மிகவும் முக்கியமானதாகத் திகழப் போகிறது,” என்று சிங்கப்பூர்-ஹீப்ரு பல்கலைக்கழக ஆய்வு, தொழில்முனைப்புத் திட்டத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் ஷ்லோமோ சேஷன் கூறினார்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் செயற்கை இறைச்சித் துறையில் முதலீடு 96 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 2021ல் $48 மில்லியனாக இருந்தது 2022ல் $95 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று ‘குட் ஃபுட் இன்ஸ்டிடியூட்’ எனும் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!