தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவோருக்கு உதவும் புதிய தெமாசெக் கடைவீடு

2 mins read
0e54f9df-c00e-48f6-a217-7e3821fcb14f
நான்கு கடைவீடுகளுக்கு விரிவடைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட தெமாசெக் கடைவீடு, செப்டம்பர் 29ஆம் தேதி முதல் பொதுமக்களை வரவேற்கும். - படம்: தெமாசெக் கடைவீடு

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்குப் புதிய அலுவல் இடங்களும் வாய்ப்புகளும் வழங்கவுள்ளது செப்டம்பர் 29ஆம் தேதி திறக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட ‘தெமாசெக் கடைவீடு’.

ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள ‘தெமாசெக் கடைவீடு’, 2023ல் விரிவாக்கப் பணிகளுக்காக மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முன்பு ஒரே ஒரு கடைவீடாக இருந்த அது இப்போது நான்கு கடைவீடுகளை உள்ளடக்கும் வகையில் விரிவடைந்துள்ளது. அதன் பரப்பளவு 25,000 சதுர அடியிலிருந்து மும்மடங்காகியுள்ளது.

புதிய தெமாசெக் கடைவீட்டின் ஒரு பகுதியின் உட்புறத் தோற்றம்.
புதிய தெமாசெக் கடைவீட்டின் ஒரு பகுதியின் உட்புறத் தோற்றம். - படம்: ரவி சிங்காரம்

கடைவீடுகளின் வரலாற்றுச் சிறப்பு அம்சங்களைத் தொடர்ந்து நினைவுகூர்ந்து, சிறப்பிக்கும் வகையில் அது அமைகிறது.

சமூக நோக்குடைய நிறுவனங்கள், லாப நோக்கமற்ற நிறுவனங்கள், அறநிறுவனங்கள் போன்றவை நிகழ்ச்சி நடத்துவதற்கான மூன்று அரங்குகள் புதிய தெமாசெக் கடைவீட்டில் உள்ளன. இப்போது அதில் 60 கூட்டுப் பணியிடங்களும் உள்ளன. சமூக நோக்குடைய நிகழ்ச்சிகளை ‘தெம்புசு கேனபி’ (160 முதல் 200 பேர் வரை), ‘பான்யான் கோவ்’ (180 முதல் 220 பேர் வரை) எனும் இரு புதிய அரங்குகளில் நடத்தலாம்.

 புதிய ‘தெம்புசு கேனபி’யில் 160 முதல் 200 பேர் வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
புதிய ‘தெம்புசு கேனபி’யில் 160 முதல் 200 பேர் வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். - படம்: தெமாசெக் கடைவீடு

நிறுவனங்களின் சமூகத் தாக்கத்தை விரிவாக்க ‘தெமாசெக் ‌‌‌ஷாப்ஹவுஸ் கலெக்டிவ்’ எனும் புதிய முயற்சியைத் தெமாசெக் கடைவீடு தொடங்கியுள்ளது. உறுப்பினர்கள் அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தலாம்; வழிகாட்டுதல் பெறலாம்.

சமூகத்துக்குப் பயனுள்ள கதைகளைச் சொல்வதில் மக்களுக்குப் பயிற்சி வழங்க, புதிய ‘இம்பேக்ட் ஸ்டோரிடெல்லர்ஸ் கலெக்டிவ்’ திட்டமும் தொடங்கியுள்ளது. உறுப்பினர்கள், தெமாசெக் கடைவீட்டின் ஊடகக் கூடத்தைப் பயன்படுத்தலாம். தம் படைப்புகளைக் கடைவீட்டில் திரையிடலாம். பயிலரங்குகளில் பங்கேற்கலாம்.

புதிய ‘இம்பேக்ட் ஸ்டோரிடெல்லர்ஸ் கலெக்டிவ்’ உறுப்பினர்கள் ஊடகக் கூடத்தைப் பயன்படுத்தலாம்.
புதிய ‘இம்பேக்ட் ஸ்டோரிடெல்லர்ஸ் கலெக்டிவ்’ உறுப்பினர்கள் ஊடகக் கூடத்தைப் பயன்படுத்தலாம். - படம்: ரவி சிங்காரம்

டிமென்‌ஷியா சிங்கப்பூரின் 35ஆம் ஆண்டுநிறைவுக்காக, தெமாசெக் கடைவீடு அதனுடன் இணைந்து விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை நடத்தும். செப்டம்பர் 29, நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் இசைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நவம்பர் 8, 9ஆம் தேதிகளில் சுற்றுப்புறம், சமூகம் தொடர்பான விழா நடக்கும்.

வரலாற்றைக் காட்சிப்படுத்தும் கடைவீடு

ஆர்ச்சர்ட் சாலையின் வரலாற்றைக் காட்டும் செயற்கை நுண்ணறிவுக் காணொளியை மக்கள் காண முடியும். ‘மிட்ஃபிலிம் ஹவுஸ்’சின் வரலாற்றைக் காட்டும் சுவரொட்டியும் உள்ளது.

ஆர்ச்சர்ட் சாலையின் வரலாற்றைக் காட்டும் செயற்கை நுண்ணறிவுக் காணொளியை மக்கள் காண முடியும்.
ஆர்ச்சர்ட் சாலையின் வரலாற்றைக் காட்டும் செயற்கை நுண்ணறிவுக் காணொளியை மக்கள் காண முடியும். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூரின் மரபை நினைவுகூரும் காட்சிக்கூடத்தை மளிகைக் கடை வடிவில் அமைத்துள்ளது ‘அவர் கிராண்ட்ஃபாதர் ஸ்டோரி’.

பழங்கால மளிகைக் கடை வடிவில் அமைந்துள்ள ‘அவர் கிராண்ட்ஃபாதர் ஸ்டோரி’யின் காட்சிக்கூடம்.
பழங்கால மளிகைக் கடை வடிவில் அமைந்துள்ள ‘அவர் கிராண்ட்ஃபாதர் ஸ்டோரி’யின் காட்சிக்கூடம். - படம்: ரவி சிங்காரம்

கூடுதல் விவரங்களுக்கு https://www.temasekshophouse.org.sg இணையத்தளத்தை நாடலாம்.

மலாக்காவைச் சார்ந்த செல்வந்தர்கள் இருவரால் 1928ல் கட்டப்பட்ட ‘தெமாசெக் கடைவீடு’, ஒரு காலத்தில் ‘மலாய் மோட்டார்ஸ்’ காட்சிக்கூடம், ‘மிட்ஃபிலிம் ஹவுஸ்’ எனும் திரைப்பட விநியோகக்கூடம் போன்ற முக்கிய இடங்களின் இருப்பிடமாக இருந்தது. பல்லாண்டுகளாக மரச்சாமான் கடை, உணவுக்கடை, ஆடை விற்பனைக் கடை போன்றவற்றையும் அது கொண்டிருந்தது.

2000களில் நகர மறுசீரமைப்பு ஆணையம் அக்கட்டடத்தைப் பாதுகாக்கப்பட்ட கட்டடமாக அறிவித்தது. 2017ல் கட்டடம் ஏலத்துக்கு விடப்பட்டபின் 2019ஆம் ஆண்டு தெமாசெக் டிரஸ்ட் நிர்வாகத்தின்கீழ் தெமாசெக் கடைவீட்டைத் திறந்தது.

தெமாசெக் கடைவீட்டில் செயல்படும் ‘ஆபிரி’ நிறுவனம், வருமானம் தேடும் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறது.
தெமாசெக் கடைவீட்டில் செயல்படும் ‘ஆபிரி’ நிறுவனம், வருமானம் தேடும் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறது. - படம்: ரவி சிங்காரம்
சிறப்புத் தேவைகள் கொண்டவர்களை வேலையில் அமர்த்தும் ‘ஃபோர்வர்ட் காஃபி’ தெமாசெக் கடைவீட்டுக்குத் திரும்புகிறது.
சிறப்புத் தேவைகள் கொண்டவர்களை வேலையில் அமர்த்தும் ‘ஃபோர்வர்ட் காஃபி’ தெமாசெக் கடைவீட்டுக்குத் திரும்புகிறது. - படம்: ரவி சிங்காரம்
‘பிபிக் வைலட்’ பெரனக்கான் கஃபே தெமாசெக் கடைவீட்டில் உள்ளது.
‘பிபிக் வைலட்’ பெரனக்கான் கஃபே தெமாசெக் கடைவீட்டில் உள்ளது. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்