துவாசில் கழிவுப் பொருள்களை வகைப்படுத்தும் புதிய நிலையம்

துவாசில் கழிவுப் பொருள்களை வகைப்படுத்தும் புதிய நிலையம்

இரண்டு மாதங்களில் 27.5 மில்லியன் பாட்டில்களும் தகரக் கலன்களும் சேகரிப்பு
1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2026 - 7:19 pm

2 mins read

https://www.straitstimes.com/singapore/environment/new-tuas-sorting-facility-collects-33m-bottles-and-cans-for-recycling-in-under-2-months?ref=top-stories

துவாஸ் பேயில் உள்ள இந்தப் பொருள்களை தனித்தனி வகைகளாகப் பிரிக்கும் இயந்திரங்கள், சிங்கப்பூரில் உள்ள பலர் சரியாகச் செய்யத் தவறும் ஒரு காரியத்தைச் செய்கின்றன. அவை, மறுசுழற்சிக்காக காலியான உலோகம், நெகிழிக் கலன்களைத் தரம் பிரிக்கின்றன.

நாள்தோறும், பானக் கலன்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் (பிசிஆர்எஸ்) கீழ் திருப்பித் தரப்பட்ட, தட்டையாக்கப்பட்ட சுமார் 1,200 பெரிய பைகளில் உள்ள தகரக் கலன்களையும் பாட்டில்களையும் அவை பெற்று, ஒரு தொழிற்சாலையில் காணப்படும் நகரும் கடத்துப் பட்டை (Coveyor belt) போன்ற அமைப்பில் அனுப்புகின்றன.

காந்தங்கள் சில உலோகப் பாத்திரங்களை நெகிழிப் பாத்திரங்களிலிருந்து பிரிக்கின்றன. பின்னர் அவை குழாய்கள் வழியாக மற்றோர் இடத்திற்கு உறிஞ்சப்பட்டு, அங்கு அவற்றின் வர்த்தகச் சின்னங்கள் அகற்றப்படுகின்றன.

பின்னர், அகச்சிவப்பு (இன்ஃபிராரெட்) ஒளிக்கதிர்களைப் பயன்படுத்தி நெகிழிக் கலன்கள் நான்கு வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

நீல நிற மறுசுழற்சித் தொட்டிகளுக்கான மற்ற வகைப்படுத்தும் நிலையங்களைப் போலன்றி, இங்கு மறுசுழற்சிக்கு உகந்த பொருள்களைப் பிரித்தெடுக்கவும் சுமார் 40 விழுக்காட்டுக் கழிவுகளை (மாசுமிக்க பொருள்களை) அகற்றவும் மனித உழைப்பு தேவைப்படுவதில்லை.

திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 21) அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்ட, துவாஸ் பகுதியில் அமைந்துள்ள பிசிஆர்எஸ்-இன் ‘எண்ணுதல் மற்றும் வகைப்படுத்தும் நிலையம்’, ஆகஸ்ட் மாதத்திலேயே தனது செயல்பாட்டைத் தொடங்கியது.

குறிப்பிட்ட அடையாளக் குறியீடுகள் கொண்ட கலன்கள் சந்தைக்கு அதிகளவில் வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நிலையத்தின் செயல்பாடுகள் மிகச் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1ஆம் தேதி பிசிஆர்எஸ் திட்டம் தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் மாதத் தொடக்கம் வரை, 5.5 மில்லியன் பானக் கலன்கள் சேகரிக்கப்பட்டன.

ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கழிவு சேகரிப்பு நிறுவனமான ‘கோரா என்விரான்மென்ட்’ மற்றும் இத்திட்டத்தை நிர்வகிக்கும் பிசிஆர்எஸ் நிறுவனம் ஆகியவற்றின் சூரிய ஆற்றலில் இயங்கும் நிலையமானது, சுமார் 33 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களையும் கலன்களையும் சேகரித்துள்ளது. இது முந்தைய அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

அக்டோபர் மாதம் முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, பிசிஆர்எஸ் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பானக் கலன்கள் மற்றும் 16,000 டன்னுக்கும் அதிகமான பொருள்கள் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 553 டன் பானக் கலன்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திட்டம்பானம்இயந்திர மனிதன்