தென்கிழக்காசிய விளையாட்டுகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்கு ரொக்கப்பரிசு இல்லை

1 mins read
00eed578-27f4-4da8-b3c0-08c06526cc4f
தாய்லாந்தில் இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி 202 பதக்கங்களைக் குவித்துள்ளது. - படம்: மதர்‌ஷிப்

தாய்லாந்தில் இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி 202 பதக்கங்களைக் குவித்துள்ளது. அவற்றுள் 52 தங்கம், 61 வெள்ளி, 89 வெண்கலம்.

தென்கிழக்காசிய விளையாட்டுகளைப் பொறுத்தவரை தங்கப் பதக்கம் வென்ற விளையாட்டாளர்களுக்கு மட்டும் ரொக்கம் வழங்கப்படும்.

முக்கிய விளையாட்டுகளுக்கான விருது வழங்கும் திட்டத்தின்கீழ் அந்த ரொக்கப்பரிசு கொடுக்கப்படுகிறது.

ஒற்றையர் போட்டிகளில் தங்கம் வென்ற விளையாட்டாளர்களுக்கு $10,000 ரொக்கம் வழங்கப்பட்டது.

அதே போட்டியில் இரண்டாவது அல்லது மூன்றாவது தங்கம் வென்ற போட்டியாளருக்கு ஒவ்வொரு பதக்கத்திற்கும் மேலும் $5,000 ரொக்கம் வழங்கப்படும்.

ஒவ்வொரு விளையாட்டுப் போட்டியிலும் அதிகபட்சம் மூன்று தங்கப் பதக்கங்களுக்கு மட்டும் ரொக்கம் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியாளருக்கும் அதிகபட்சம் $20,000 ரொக்கம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

தொடர் நீச்சல் போன்ற போட்டிகளில் வெல்லப்படும் தங்கப் பதக்கங்களுக்கு $15,000 ரொக்கம் வழங்கப்படும். அதைப் போட்டியாளர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

காற்பந்து போன்ற போட்டியில் தங்கம் வென்றால் $30,000 வழங்கப்படும். அதைப் போட்டியாளர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

வெள்ளி, வெண்கலப் பரிசு வெல்வோருக்கு எந்த ரொக்கப் பரிசும் வழங்கப்படாது.

எனினும், ஒலிம்பிக்ஸ், ஆசியான் விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகள் ஆகியவற்றில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டாளர்களுக்கு ரொக்கம் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்