பிப்ரவரி மாதம் நடைபெற்ற முழுமைத் தற்தாப்பு தினப் பயிற்சியில் பங்கெடுத்த 187 பேர் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர்.
முழுமைத் தற்காப்பு தினப் பயிற்சியின்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் நச்சுணவு பாதிப்புக்கும் முழுமைத் தற்காப்பு தினப் பயிற்சியின்போது வழங்கப்பட்ட உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் இணைந்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வெளியிட்டன.
வழங்கப்பட்ட உணவுவகை மாதிரிகள், ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் உணவு தயாரிப்புச் சாதனங்கள் மற்றும் இடங்கள், நோய்வாய்ப்பட்டவர்களின் மலம் ஆகியவை சோதனை செய்யப்பட்டன.
உணவைத் தயாரித்தவர்களும் சோதனைக்கு உட்பட்டனர்.
முழுமைத் தற்காப்பு தினப் பயிற்சியில் பங்கெடுத்தோருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுவகைகளில் நச்சுணவுப் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரியவந்துள்ளது.
உணவு தயாரிக்கப்பட்டபோது எவ்வித பாதுகாப்புக் குறைபாடுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2025 எக்சர்சைஸ் எஸ்ஜி ரெடியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 15ஆம் தேதிக்கும் 28ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் முழுமைத் தற்காப்பு தினப் பயிற்சியில் ஈடுபடுவோருக்காக கிட்டத்தட்ட 150,000 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன.

