‌ஷென்டன் வே எம்ஆர்டி நிலைய ஏற்றத்தாழ்வான தரையால் ஆபத்தில்லை

2 mins read
933f97d9-7076-42cc-8fd4-74199ff88706
‌ஷென்டன் வே நிலையத்தின் நுழைவாயில்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நிலம். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஷென்டன் வே பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) நிலையத்தின் நுழைவாயில்களில் தரைப் பகுதிகள் ஏற்றத்தாழ்வாக இருக்கின்றன.

எனினும் அதனால் கட்டமைப்புக்கோ பயணிகளுக்கோ பாதுகாப்பு அபாயம் ஏதும் கிடையாது என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் கட்டட, கட்டுமான ஆணையமும் சனிக்கிழமை (மே 17) தெரிவித்தன. அந்நிலத்தின் இயற்கைத் தன்மைதான் அது ஏற்றத்தாழ்வாக இருப்பதற்கான காரணமாக இருக்கும் என்று இரு அமைப்புகளும் குறிப்பிட்டன.

ஷென்டன் வே நிலையத்துக்கு வெளியே உள்ள நடைபாதை குறைந்தது ஐந்து சென்டிமீட்டர் உள்ளே இறங்கியிருந்ததை இம்மாதம் ஆறாம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கவனித்தது.

அந்நிலையத்தின் ஒரு நுழைவாயிலுக்கு அருகே ‘எச்சரிக்கை! ஏற்றத்தாழ்வான நிலங்கள்’ (Warning! Uneven gounds) என்ற பொருளைக் கொண்ட ஆங்கில எச்சரிக்கைக் குறிப்பு காணப்பட்டது.

இதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த நிலப் போக்குவரத்து ஆணையம், ‌ஷென்டன் வே நிலையத்தின் ஒன்றாம், இரண்டாம் நுழைவாயில்களில் இப்பிரச்சினை இருப்பது சென்ற ஆண்டிறுதியிலிருந்து தங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நுழைவாயில்கள் உட்பட ‌ஷென்டன் வே நிலையம் ரயில் செயல்பாடுகளுக்கும் பயணிகளுக்கும் கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பாக இருக்கிறது என்று தாங்கள் ஆராய்ந்து தீர்மானித்ததாக ஆணையம் சொன்னது.

எச்சரிக்கை குறிப்புகளை எழுப்புவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தாங்கள் எஸ்எம்ஆர்டி நிலையத்துடன் இணைந்து பணியாற்றியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

மேலும், இதற்கு நீண்டகாலத் தீர்வுகொண்டுவர கட்டட, கட்டுமான ஆணையத்திடமிருந்து ஆலோசனை பெற்று வருவதாகவும் அது கூறியது.

“சீரற்ற நிலம் இயற்கையான தரை செறிவால் ஏற்பட வாய்ப்புள்ளது. மென்மையான கடல் களிமண் உள்ள பகுதிகளில் படிப்படியான செயல்முறை பொதுவானது. நீரில் மூழ்கிய களிமண், வண்டல் மற்றும் மணலின் புவியியல் அடுக்கு, அந்தப் பகுதிக்கு அடியில் உள்ளது மற்றும் சிங்கப்பூரின் மீட்டெடுக்கப்பட்ட அல்லது கடலோரப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகிறது,” என்று கட்டட, கட்டுமான ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்