என்டியுவின் புதிய கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கும்

என்டியுவின் புதிய கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கும்

1 mins read
16cb3744-15dc-4ce7-8335-9bdaebddd819
மாணவர்களுக்குத் தொழில்துறை தொடர்பான பட்டக்கல்வியை வழங்குவதே இந்தப் புதிய கல்லூரியின் நோக்கம் என என்டியு தெரிவித்தது. - படம்: என்டியு

செயற்கை நுண்ணறிவு, கணினி பயன்பாடு மற்றும் தரவு அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டிலிருந்து நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்டியு) புதிய கல்லூரியில் சேரலாம்.

தொழில்துறை சார்ந்த பட்டக்கல்வி வழங்குவதே இந்தப் புதிய கணினி பயன்பாடு மற்றும் தரவு அறிவியல் கல்லூரியின் நோக்கம் என என்டியு அறிக்கை ஒன்றில் திங்கட்கிழமை (பிப்ரவரி 19ஆம் தேதி) தெரிவித்தது.

இந்தப் பட்டகல்வித் திட்டங்கள் செயற்கை நுண்ணறிவில் மாணவர்கள் சரளமாக இருக்க உதவும் என அந்த அறிக்கையில் என்டியு மேலும் குறிப்பிட்டது.

இந்தப் புதிய கல்லூரியில் 4,800க்கும் அதிகமான மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய கல்லூரிகளுடன் இணைந்து ஒருங்கிணைவுக் கற்றலை ஊக்குவிக்க முடியும் என இக்கல்லூரி நம்புவதாக என்டியு மேலும் அவ்வறிக்கையில் எடுத்துரைத்தது.

இக்கல்லூரியில் என்டியுவின் கணினி அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தற்போது இருக்கும் திட்டங்களான ஒன்பது இளங்கலை, ஐந்து பட்டக்கல்வி திட்டங்களைக் கொண்டிருக்கும் என என்டியு கூறியது.

குறிப்புச் சொற்கள்