விமானக் கண்காட்சியில் ‘என்டியு’வின் விமான மாதிரி வடிவம்

விமானக் கண்காட்சியில் ‘என்டியு’வின் விமான மாதிரி வடிவம்

1 mins read
57627e36-1a77-4a2e-8b8b-f91d0245361c
செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்கக் கூடிய (eVTOL) சிறிய விமானத்தின் மாதிரி வடிவத்தை என்டியு சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) உள்நாட்டில் வடிவமைத்துத் தயாரிக்கப்படும் விமானத்தின் மாதிரி வடிவத்தை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) வெளியிட்டது.

செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்கக் கூடிய (eVTOL) சிறிய விமானத்தின் மாதிரி வடிவம் பிப்ரவரி 3 முதல் 8 வரை நடைபெறும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சோதனை நிலையில் இருக்கும் அத்தகைய விமானம், சரக்குகளை எடுத்துச் செல்லவோ அல்லது நெருக்கடிநிலை மருத்துவச் சேவைகளுக்கோ விமான டாக்சிகளாகப் பயன்படுத்தக்கூடியவை.

“பாரம்பரியமான விமானத்தின் காற்றை எதிர்த்துச் செல்லும் திறனும் ஹெலிகாப்டரின் சுழன்று மிதக்கும் திறனும் இணைந்த வடிவம்,” என்று என்டியு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

eVTOL மாதிரி வடிவத்துடன் பேராசிரியர் ஜேம்ஸ் வாங் 
eVTOL மாதிரி வடிவத்துடன் பேராசிரியர் ஜேம்ஸ் வாங்  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறுகலான இடத்தில் பறக்கக்கூடிய எட்டு மீட்டர் நீள இறக்கைகள் கொண்ட இந்த மாதிரி வடிவத்தை உருவாக்க மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

இத்திட்டத்தில் ஏ-ஸ்டார், ரிபப்ளிக் பலதுறை தொழில்கல்லூரி, ஈடன் ஏரோஸ்பேஸ், தானியக்க வாகனத் தயாரிப்பு நிறுவனமான எம்பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து பணியாற்றின.

மக்களையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்லக்கூடிய மாதிரி விமானத்தை உருவாக்க தொழில்துறை பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக என்டியு தெரிவித்தது

பேராசிரியர் ஜேம்ஸ் வாங் தலைமையிலான இந்தத் திட்டம், வான்வெளித் துறையில் சிங்கப்பூரை முக்கிய தொழில்நுட்பப் புத்தாக்க மையமாக உருவாக்கும் நோக்கைக் கொண்டது.

எட்டு மீட்டர் நீள இறக்கைகள் கொண்ட மாதிரி வடிவம்.
எட்டு மீட்டர் நீள இறக்கைகள் கொண்ட மாதிரி வடிவம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்