தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரச்சினையை ஆராய முத்தரப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது

2 mins read
சட்டவிரோதமாக இணையவழி வேலைகளில் ஈடுபடும் வெளிநாட்டினர்
a89b4baa-8678-43eb-a5e3-9ce8e7d658e4
இணையவழி ஊழியர்களுடனான வழக்கமான தொடர்புகள் மூலம் இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகள் பற்றிய கருத்துகளைப் பெற்றதாக என்டியுசி கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டினர் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் உணவு விநியோக வேலைகளைச் செய்வதாகவும், இது அவர்களின் வருவாயை நேரடியாகப் பாதிப்பதாகவும் இணையவழி ஊழியர்கள் அளித்த புகாரைத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆராய்ந்து வருவதாக என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, மனிதவள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, கிராப் சிங்கப்பூர், என்டியுசி மற்றும் அதன் பிற இணைப்புச் சங்கங்களைக் கொண்ட ஒரு பணிக்குழுவை அமைக்க தொழிலாளர் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

“எங்கள் இணையவழி ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஏனெனில், அவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறார்கள். சட்டவிரோத ஊழியர்களின் போட்டி காரணமாக அவர்கள் குறைந்த வருமானத்தால் பாதிக்கப்படுவது சரியல்ல,” என்று திரு இங் ஓர் அறிக்கையில் கூறினார்.

இணையவழி ஊழியர்களுடனான அதன் வழக்கமான ஈடுபாடுகள் மூலம் இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகள் குறித்த கருத்துகளைப் பெற்றதாக என்டியுசி தெரிவித்துள்ளது.

இணையவழி ஊழியர்கள், முதன்மையாக டாக்சி மற்றும் விநியோகச் சேவைகளை வழங்க இணையவழி நடத்துநர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். கிராப் மற்றும் கோஜெக் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தனியார்-வாடகை ஓட்டுநர்கள், கிராப்ஃபுட், ஃபுட்பாண்டா, டெலிவரூ போன்ற உணவு விநியோகச் சேவைகளுக்கான விநியோக ஊழியர்கள் ஆகியோர் இங்கு பணிபுரிகின்றனர்.

“இந்த வெளிநாட்டினரில் சிலர் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி இணையத்தில் நேரடியாக விநியோக வேலைகளை சட்டவிரோதமாக மேற்கொள்கின்றனர். இது அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் இணையவழிப் பணிகளை சிங்கப்பூரர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்,” என்று என்டியுசி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், பணி அனுமதியுடன் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தக்கூடிய பிற நிறுவனங்களின் விநியோக வேலைகளுக்கு மற்றவர்களைப் பயன்படுத்தும் இணையவழி நடத்துநர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் பணியமர்த்தப்படும் சில வெளிநாட்டினர் வொர்க் பெர்மிட் இல்லாமல் பணிபுரிவதாகவும் தகவல்கள் வந்துள்ளதாக என்டியுசி தெரிவித்துள்ளது.

“இது எங்கள் விநியோக ஊழியர்களுக்கு சட்டவிரோதமான அல்லது நியாயமற்ற போட்டியை உருவாக்குகிறது. மேலும் இது அவர்களின் வருவாயில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்று அது மேலும் கூறியது. இதற்கிடையே, ஜூலை 4 ஆம் தேதி மனிதவள அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், சுகாதார மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், கிராப் குழுமத்தின் செயல்பாட்டு நிர்வாக இயக்குநர் யீ வீ டாங் ஆகியோர் முத்தரப்புப் பணிக் குழுவை மேற்பார்வையிடுவார்கள் என்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்