ஆசிரியைகளின் அந்தரங்கத்தைப் படம் பிடித்த ஆசிரியர்மீது பல குற்றச்சாட்டுகள்

ஆசிரியைகளின் அந்தரங்கத்தைப் படம் பிடித்த ஆசிரியர்மீது பல குற்றச்சாட்டுகள்

1 mins read
251c632c-8c35-481b-9fe6-d931a3ccacff
53 வயது ஆசிரியர்மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர்ப் பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர், வேலையிடத்தில் சக ஆசிரியைகள் ஆறு பேரின் அந்தரங்கத்தைக் கைப்பேசியின் மூலம் படம்பிடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அந்த 53 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றுள் தகாத படங்களை எடுத்ததாகக் கூறப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளும் அடங்கும்.

ஆடவர், 2021ஆம் ஆண்டுக்கும் 2023க்கும் இடையில் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

சம்பந்தப்பட்ட பெண்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஆடவரின் பெயரும் பள்ளியின் விவரங்களும் வெளியிடப்படவில்லை.

பெண்களுக்குத் தெரியாமல் ஆடவர், அவர்களின் பின்புறத்தைக் கைப்பேசியில் படம் பிடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வேறு மூன்று பெண்களின் பின்புறத்தைக் காட்டும் படங்களையும் அவர் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவற்றோடு 174 ஆபாசக் காணொளிகளும் அவரிடம் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

எப்படி இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது என்பது தெரியவில்லை.

ஆடவரின் வழக்கு மீண்டும் அடுத்த மாதம் (ஏப்ரல்) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்