சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் (என்யூஎஸ்) அதன் மாணவர்களுக்கு சில அறிவிப்புகள் மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பெரும்பாலான மாணவர்களுக்கு இனி புதன்கிழமை பிற்பகல் வகுப்புகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இது நடப்பிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கல்விப் பயணத்தை மேலும் இனிமையாக்க இந்த புதிய நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்டது.
புதிதாக பல்கலைக்கழகத்தில் இணையும் மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தங்களது தனிநபர் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது.
பெரும்பாலான இளநிலை மாணவர்களுக்கு புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் இனி இருக்காது. இருப்பினும் ஆய்வுக்கூட வகுப்புகள் தொடர்ந்து நடக்கும்.
புதன்கிழமை பிற்பகல் நேரங்களில் மாணவர்கள் விளையாட்டு, கலை போன்ற கல்விசாரா நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் 7,400 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர்.
இந்நிலையில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுக் கருப்பொருளில் மாணவர் விடுதி உருவாக்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அது அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த மாணவர் விடுதி விளையாட்டாளர்களுக்கும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் உள்ள ஒரு சமூக மன்றமாக இருக்கும் என்று கூறப்பட்டது.