இணையத் தாக்குதலில் என்யுஎஸ் மாணவர்களின் விவரம் கசிந்ததாக சந்தேகம்

இணையத் தாக்குதலில் என்யுஎஸ் மாணவர்களின் விவரம் கசிந்ததாக சந்தேகம்

1 mins read
5314fcf8-e229-4c6a-bf19-eb30c469ebc6
பெயர் விவரங்கள் வெளியானபோதும் மறைச்சொற்கள் களவாடப்படவில்லை என்று என்யுஎஸ் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளாவிய இணையத் தாக்குதலில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர்கள் சிலரின் பெயர்களும் மின்னஞ்சல் முகவரிகளும் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதுபற்றி என்யுஎஸ் தனது மாணவர்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளது. முகவரிகளும் பெயர்களும் வெளியாகி இருந்தாலும் மறைச்சொற்கள் ஊடுருவப்படவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (மே 7) நடத்தப்பட்ட பெரிய இணையத்தாக்குதலில் சிக்கிய அனைத்துலகக் கல்விக் கழகங்களில் என்யுஎஸ்ஸும் ஒன்று.

இணையத் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தி, பணம் பறிக்கும் ‘ஷைனிஹன்டர்ஸ்’ என்னும் குழு அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. அந்தத் தாக்குதல் காரணமாக *கேன்வாஸ்’ (Canvas) கற்றல் தளத்திற்குள் நுழைவதற்கான அனுமதியைத் தடுத்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி கூறியுள்ளது.

இணையம் வழியாக மிரட்டி பணம் பறிக்கும் ‘ஷைனிஹன்டர்ஸ்’ குழுவின் அந்தத் தாக்குதலால், ‘கேன்வாஸ்’ கற்றல் தளத்திற்கான அணுகல் முடக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை என்யுஎஸ் தமது மாணவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. தரவுக்கசிவுச் சம்பவம் என்ற பொருளில் அனுப்பப்பட்டுள்ள அந்த மின்னஞ்சலில் ‘கேன்வாஸ்’ கற்றல் தளம் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.

“இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகம் கவலைப்படுகிறது. இருப்பினும், அதுபற்றி விசாரித்து நிலைமையைச் சீர்செய்யும் பணிக்கு முக்கியத்தும் தரப்பட்டுள்ளது,” என்று பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகம் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்