என்விடியா சில்லுகள் விவகாரம்: ஆடவர் மீது 41 குற்றச்சாட்டுகள்

என்விடியா சில்லுகள் விவகாரம்: ஆடவர் மீது 41 குற்றச்சாட்டுகள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2026 - 6:58 pm

1 mins read

சட்டவிரோதமாக என்விடியா சில்லு கட்டமைப்புகளைக் கடத்திய விவகாரத்தில் ஷி பிங்ஷே என்பவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் ஐந்தாவது நபர் ‌ஷி. சீனக் குடிமகனான அவர்மீது 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சூப்பர்பை நிறுவனத்தின் இயக்குநராகவும், என்ஜே குளோபல் ஃபைனான்சியல் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் உள்ள ஷி, 2024 மே முதல் 2025 பிப்ரவரி வரை குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதே விவகாரத்தில் ஜூலை மாதம் அபெரியா இன்டர்நேஷனல் உட்பட நான்கு நிறுவனங்கள் மீது மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தற்போது ஷிக்கு 300,000 வெள்ளி பிணை வழங்கப்பபட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை ஐந்து நபர்கள், ஆறு நிறுவனங்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மலேசியாவுக்கு என்விடியா சில்லுகள் கொண்ட சேவையகங்களை ஏற்றுமதி செய்ததாக நிறுவனங்கள்மீது குற்றம் சாட்டப்பட்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து, வழக்கிற்குத் தொடர்புடைய 55 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பங்களாவை விற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், 1 மில்லியன் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஷி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 500,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு 2027 ஜனவரி 4ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்