என்விடியா நிறுவனத்தின் அதிநவீன சில்லுகள் மறைமுகமாக சீனாவிற்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து அமெரிக்கா விசாரணை நடத்திவருகிறது.
அதில் முக்கியமாக சம்பந்தப்பட்டுள்ள மெகாஸ்பீட் நிறுவனத்துக்கு உரிமை வகிக்கும் சிங்கப்பூர் நிறுவனமான ஸ்விஃப்ட்டேட்டா தான் பதிவுசெய்த முகவரியில் செயல்படவில்லை என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக மையம் ஒன்றில் அந்நிறுவனம் பதிவுசெய்த முகவரிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புதன்கிழமை (நவம்பர் 11) நேரில் சென்று பார்த்தது.
முகவரி மாற்றம்
முன்னதாக ஜுரோங் ஈஸ்ட்டில் உள்ள அலுவலகக் கட்டடம் ஒன்றில் உள்ள பகுதியை ஸ்விஃப்ட்டேட்டா தனது முகவரியாகக் குறிப்பிட்டிருந்தது. பிறகு முகவரியை மிட்வியூ சிட்டி பகுதிக்கு மாற்றியது. அந்த முகவரியில் தாங்கள் நான்காண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருவதாக உள்ளரங்கு வடிவமைப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
மெகாஸ்பீட், என்விடியா சில்லுகளைப் பெரிய அளவில் வாங்கும் அந்நிறுவனம் அதிவேக வளர்ச்சி கண்டது.
2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்விஃப்ட்டேட்டா, மெகாஸ்பீடின் ஒரே பங்குதாரராகும். மெகாஸ்பீடின் அனைத்து 10 மில்லியன் பங்குகளுக்கும் ஸ்விஃப்ட்டேட்டா உரிமை வகிப்பதாக கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பதிவுகள் காட்டுகின்றன.
கடந்த 2024ல் அமெரிக்காவின் சில்லு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மெகாஸ்பீட் மீறியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். உள்ளூர் சட்டங்களை மீறிய சந்தேகத்தின்பேரில் மெகாஸ்பீட்மீது தாங்கள் விசாரணை நடத்திவருவதாக சிங்கப்பூர் காவல்துறை சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்தது.
முன்னாள் மெகாஸ்பீட் ஊழியரான ஏலிஸ் ஹுவாங் என்பவருக்கும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்குக்கும் இடையிலான நெருங்கிய உறவு குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இவ்வாண்டு அக்டோபர் மாதம் மெகாஸ்பீட்மீது மறுபடியும் கவனம் திரும்பியது. ஏலிஸ் ஹுவாங்குடன் தான் கள்ள உறவில் ஈடுபட்டதை ஜென்சன் ஹுவாங் நவம்பர் மாதம் 8ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
ஏலிஸ் ஹுவாங், சினாவின் உளவாளி என்று நம்பப்படுகிறது.
