நிலையான நிதியுதவி மூலம் 12,000 சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் புதிய இலக்குடன், சுற்றுச்சூழல் சார்ந்த தனது திட்டங்களை ஓசிபிசி வங்கி தீவிரப்படுத்தியுள்ளது
சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், இந்தோனீசியா ஆகிய நான்கு முக்கிய சந்தைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) ஓசிபிசி தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் நடந்த வங்கியின் வருவாய் விளக்கக் கூட்டத்தின்போது, ஓசிபிசி தலைமை நிர்வாகி டான் டெக் லாங் அறிவித்த புதிய பெருநிறுவன உத்தியுடன் அந்தப் புதிய இலக்கு ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட பெருநிறுவனங்களுக்கான உத்தியில் பசுமை மாற்றத்திற்கான தொடர்ச்சியான ஆதரவும் அடங்கும்.
கடந்த ஆண்டிறுதி நிலவரப்படி, 5,000 சிறிய, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான நிதியுதவியை ஓசிபிசி வங்கி வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டில், இந்த நிதியுதவியைப் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்தது; மொத்த நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட 40 விழுக்காடு அதிகரித்தது.

