ஓசிபிசி வங்கியின் கைப்பேசி, இணைய வங்கிச் சேவைத் தடங்கல் விலகியது

ஓசிபிசி வங்கியின் கைப்பேசி, இணைய வங்கிச் சேவைத் தடங்கல் விலகியது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Oct 2026 - 8:57 pm

1 mins read

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) பிற்பகலில், ஓசிபிசி வங்கியின் சில வாடிக்கையாளர்கள் அதன் கைப்பேசி, இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட சேவைகள் தற்போது மீண்டும் சீரமைக்கப்பட்டுவிட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.

சேவைத் தடங்கல்களைக் கண்காணிக்கும் ‘டௌன்டிடெக்டர்’ (Downdetector) இணையத்தளத்தின்படி, இந்தத் தடங்கல் பிற்பகல் 12.15 மணியளவில் தொடங்கியது. பிற்பகல் 1.11 மணியளவில், இது உச்சத்தை எட்டி, 767க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின.

பிற்பகல் 2.56 மணியளவில், புகார்களின் எண்ணிக்கை சுமார் 71ஆகக் குறைந்தது.

“இன்று பிற்பகலில், எங்கள் கைப்பேசி, இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்கள் அவ்வப்போது வேகம் குறைவான சூழலை எதிர்கொண்டனர்,” என்று ஓசிபிசி வங்கியின் பேச்சாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எங்களது ‘ஏடிஎம்’, அட்டைச் சேவைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்பதையும், வாடிக்கையாளர் தரவுகள் எவையும் கசியவில்லை என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அந்தப் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வாடிக்கையாளர்கைப்பேசிஓசிபிசி