தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$500 மில்லியன் முதலீடு; பொங்கோலில் 4,000 ஓசிபிசி ஊழியர்களுக்கான மையம்

2 mins read
2c7b2be3-ab1f-4492-bce9-823940d796d8
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் ஓசிபிசியின் புதிய மையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

ஓசிபிசி வங்கி, பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் (Punggol Digital District) புதிய புத்தாக்க மையம் ஒன்றை அமைத்து வருகிறது.

ஐந்நூறு மில்லியன் வெள்ளி முதலீட்டின் ஓர் அங்கமாக புதிய மையம் அமைக்கப்படுகிறது. ‘ஒசிபிசி பொங்கோல்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மையம், 2027ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒசிபிசி, புதன்கிழமையன்று (செப்டம்பர் 18) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

புதிய மையத்தில் ஓசிபிசி ஊழியர்களில் 4,000 பேர் வரை வேலை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அந்நிறுவனத்தின் தொழில்நுட்கப் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

ஓசிபிசியின் புதிய அலுவலகம், ஒருங்கிணைக்கப்பட்ட 12 தள நிலையத்தில் எட்டுத் தளங்களில் அமையும். அந்நிலையத்தில் 200 அறைகள் கொண்ட ஹோட்டல், சில்லறை வர்த்தகங்ளுக்கான இடங்கள் ஆகியவையும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையத்துக்கு அருகில் உள்ள சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துக்கும் நேரடி இணைப்பு ஏற்படுத்தப்படும்.

முதலீட்டின்கீழ் ஓசிபிசி, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி, புத்தாக்கக் கூடம் ஒன்றைத் தொடங்கும். அதன் மூலம் நிதித் தொழில்நுட்பத் துறைக்கு மெருகூட்டுவதோடு வருங்காலத் திறனாளர்களை உருவாக்குவது இலக்காகும்.

‘ஒசிபிசி பொங்கோல்’ அமைக்கப்பட்ட பிறகு அதுவே மத்திய வர்த்தகப் பகுதிக்கு அப்பால் அமைந்துள்ள ஆகப் பெரிய ஓசிபிசி அலுவலகமாக விளங்கும். அதோடு, சூலியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள ஒசிபிசி தலைமை அலுவலகத்துக்கு அடுத்தபடியாக ‘ஒசிபிசி பொங்கோல்’தான் ஆகப் பெரிதானதாக இருக்கும். ஒசிபிசி குழுமத்தின் தலை நிர்வாகி ஹெலன் வோங், புதன்கிழமையன்று ‘ஓசிபிசி பொங்கோல்’ அறிவிப்பு நிகழ்ச்சியில் இந்த விவரங்களை வெளியிட்டார்.

புதிய ஓசிபிசி மையம், 98 பொங்கோல் வேயில் அமைகிறது. அது, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் சுவா தியென் போ கண்டுபிடிப்பு மையத்துடன் சிவப்பு நிறப் பாலம் ஒன்றின் மூலம் இணைக்கப்படும்.

மேலும், ஏழு காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்குச் சமமான 430,000 சதுர அடிகளில் அமையும் ‘ஓசிபிசி பொங்கோல்’, புதிதாகக் கட்டப்படும் பொங்கோல் கோஸ்ட் பெருவிரைவு ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும்

குறிப்புச் சொற்கள்