சிங்கப்பூரில் கோலாகலமாக நடந்த ஒடிசா நிகழ்ச்சி

சிங்கப்பூரில் கோலாகலமாக நடந்த ஒடிசா நிகழ்ச்சி

2 mins read
2f57ed6b-e665-4291-802e-c92f7c1812fc
உட்கல் டிவாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மணல் ஓவியக் கலைஞர் சுதம் பிரதன். - படம்: சிங்கப்பூர் ஒடிசா சங்கம்

ஆண்டுதோறும் ஒடிசா மக்கள் சிங்கப்பூரில் கொண்டாடும் உட்கல் டிவாஸ் நிகழ்ச்சி இவ்வாண்டும் கோலாகலமாக நடந்தது.

ம்மாதம் நான்காம் தேதி உலக அனைத்துலக இந்தியப் பள்ளியின் மண்டபத்தில் நடந்தது உட்கல் டிவாஸ் 2026 நிகழ்ச்சி. 300க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் ஒடிசா சமூகத்தினர் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

சிங்கப்பூர் ஒடிசா சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

உட்கல் டிவாஸ், கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசா அமைக்கப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்ச்சியாகும். அந்த மாநிலத்தின் சிறப்புமிக்க மரபு, பண்பாடுகள் ஆகியவற்றையும் சிங்கப்பூரில் ஒடிசா மக்களிடையே காணப்படும் சமூக உணர்வையும் இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

இறைவழிபாட்டு அம்சங்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சிங்கப்பூர் ஒடிசா சங்கத் தலைவர் சுப்ரத் நாயக் வரவேற்புரையாற்றினார். சிங்கப்பூரில் ஒடிசா கலாசாரத்தைப் பற்றிப் பிறர் அறிந்துகொள்வதற்கான நடவடிக்கைகளைச் சங்கம் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ‌ஷில்பக் அம்புலே நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் கலாசார, சமூக இளையர்துறை அமைச்சு, இங்குள்ள இந்திய வங்கிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே வளர்ந்துவரும் வலுவான தொடர்புகளை டாக்டர் அம்புலே எடுத்துச்சொன்னார். அந்த வகையில், கடந்த ஈராண்டுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோர் இரு நாடுகளுக்கும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டதை டாக்டர் அம்புலே சுட்டினார்.

அதிபர் தர்மன், ஒடிசா மாநிலத்துக்குச் சென்றதைக் குறிப்பிட்ட அவர், அந்த மாநிலத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள சிறப்புத் தொடர்புப் பற்றி விளக்கினார்.

உட்கல் டிவாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கலை, இசைப் படைப்புகள் அரங்கேறின. அனைத்துலக அளவில் பிரபலமாக இருக்கும் மணல் ஓவியக் கலைஞரான சுதம் பிரதனின் படைப்பும் அவற்றில் அடங்கும்.

உட்கல் டிவாஸ் நிகழ்ச்சியில் சுதம் பிரதனின் மணல் ஓவியப் படைப்பு.
உட்கல் டிவாஸ் நிகழ்ச்சியில் சுதம் பிரதனின் மணல் ஓவியப் படைப்பு. - படம்: சிங்கப்பூர் ஒடிசா சங்கம்

ஒடிசா சமூகத்தில் உள்ள இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனர். சிங்கப்பூரில் ஒடிசா சமூகம் வளரப் பங்காற்றிய ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

இது, தப்லா! ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

குறிப்புச் சொற்கள்