மேல்முறையீட்டில் குறைக்கப்பட்ட தண்டனைக்கு ஏற்கெனவே சிறையில் இருந்த காலம் ஈடாகாது

2 mins read
42928a80-1c1c-43f5-9a7b-1067381889e2
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் குற்றவாளிகளுக்கு அபராதம் செலுத்துமாறு தண்டனை குறைக்கப்பட்டால் அவர்கள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலம் அந்த அபராதத்துக்கு ஈடாகாது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 29) அவ்வாறு தீர்ப்பளித்தது. அமைச்சர்களுக்கு எதிரான, தி ஆன்லைன் சிட்டிசன் (The Online Citizen - டிஓசி) ஊடகத்தின் மூத்த ஆசிரியர் டெரி ஸூ சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பளித்தது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெரி ஸூவுக்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்று, மூன்று வாரச் சிறைத் தண்டனை விதித்தது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்தபோதும் அவர் சிறைத் தண்டனையை நிறைவேற்ற முடிவுசெய்தார்.

திரு ஸூ தைவானுக்கு குடியேறியதால் சிறைத் தண்டனையை நிறைவேற்றி இந்த விவகாரத்துக்கு முடிவுகட்ட எண்ணம் கொண்டிருந்தார்.

சிறைத் தண்டனைக்கு எதிராக திரு ஸூ மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து அவருக்கு 8,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

எனினும், திரு ஸூ ஏற்கெனவே சிறைத் தண்டனையை நிறைவேற்றியதால் அது அபராதத்துக்கு ஈடாகும் என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், அபராதம் செலுத்தாவிட்டால் திரு ஸூ அதற்குப் பதிலாக இரண்டு வாரச் சிறைத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அந்த வழக்கில் நீதிபதி, திரு ஸூ நிறைவேற்றிய சிறைத் தண்டனை அவர் செலுத்தவேண்டிய அபராதத்துக்கு ஈடாகும் என்று தீர்ப்பளித்தார்.

ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பொதுக்கள் அக்கறை சட்டத்தின் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பினர். திரு ஸூவின் மேல்முறையீட்டு மனுவைக் கையாண்ட நீதிபதியின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தலைமை நீதிபதி சுந்தரே‌ஷ் மேனன், நீதிபதி டே யோங் குவாங், மூத்த நீதிபதி ஆண்ட்ரூ ஃபாங் மூவரும் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்