அதிகாரிகள் பாலஸ்தீன கிளர்ச்சிக் குழு ஒன்று இஸ்ரேல் ஆயுதங்களை வழங்கியது

1 mins read
c7ac6ee6-21fb-4575-bef4-3e0e6b6c98d9
ஹமாசுக்கு எதிரான குழுக்களை இஸ்ரேல் இயக்கி வருவதாகத் திரு பெஞ்சமின் நேட்டன்யாஹு கூறினார். - படம்: இபிஏ

ஜெருசலம்: காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை எதிர்ப்பதற்காக அங்குள்ள பாலஸ்தீன கிளர்ச்சிக் குழு ஒன்றுக்கு இஸ்ரேல் ஆயுதங்களை வழங்கி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

குற்றச்சாட்டுகளின் தொடர்பில் ஒரு நாள் நீடித்த சர்ச்சைக்குப் பிறகு, காஸாவில் சில குழுக்களுடன் செயலாற்றுவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு ஜூன் 5ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.

தெற்கு காஸாவிலுள்ள கிளர்ச்சிப் படை ஒன்றை வழிநடத்தும் யாசர் அபு ஷபாப்பிற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் ஆயுதங்களை வழங்கி ஆதரவளித்திருந்ததாக இஸ்ரேலைச் சேர்ந்த அதிகாரி இருவரும் இந்த விவகாரம் தெரிந்த மற்றொருவரும் தகவல் அளித்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் தெரிவித்தது.

தெற்கு காஸாவிலுள்ள ரஃபாஹ் நகரில் சிறிய ஆயுதப்படை ஒன்றை அபு ஷபாப் வழிநடத்துவதாக நம்பப்படுகிறது. பசியால் வாடும் காஸா மக்களுக்குச் சென்று சேரவேண்டி மனிதாபிமான உதவிப் பொருள்களைச் சூறையாடி அந்தப் பொருள்களைப் பணத்திற்கு விற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனை அபு ஷபாப் மறுத்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலமாக காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்கள்மீதுள்ள ஹமாஸ் அமைப்பின்பிடி இளகி வருவதுபோல காட்டுவதற்கு இஸ்ரேல் முயல்வதாகக் கருத்து நிலவுகிறது. ஹமாசுக்கு எதிரான குழுக்களை இஸ்ரேல் இயக்கி வருவதாகத் திரு நெட்டன்யாஹு கூறினார். “இதில் என்ன தவறு உள்ளது,” என்று அவர் கேட்பதைக் காண்பிக்கும் காணொளி ஒன்றும் பதிவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்