தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோயாளிகளைக் கவனிக்க முதன்மை மருத்துவர் திட்டம்

1 mins read
90c7c4fb-683d-499b-acb9-54f4a712abd5
பொது மருத்துவமனைகளில் ஒவ்வொரு நோயாளியின் மருத்துவத் தேவைகளையும் கவனித்துகொள்ள ஒரு முதன்மை மருத்துவர் இருப்பார். - கோப்புப் படம்.

நோயாளிகளின் பரமாரிப்புத் தேவைகளை ஒருங்கிணைப்பதுடன் தேவை ஏற்பட்டால் நிபுணர்களின் உதவியை நாட, ஒரு முதன்மை மருத்துவரைக் கொண்டிருக்கும் திட்டம் கூடுதலான பொது மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அந்த முதன்மை மருத்துவர் ஒரு நிபுணராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவராக இருக்கலாம். புதிய பராமரிப்புக் கட்டமைப்பின்கீழ் அவரின் சம்பளம் மறுஆய்வு செய்யப்படும்.

வழக்கமாகப் பல நிபுணர்கள் கொண்ட குழு பல மருத்துவப் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளைப் பராமரிப்பர். மேலும் நிபுணர்கள் மட்டுமே முதன்மை மருத்துவர்களாக இருக்க முடியும்.

சிங்கப்பூரின் துரிதமாக மூப்படையும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு பொது மருத்துவமனைகள் அந்த வழக்கத்தைக் கைவிடுகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் அந்த உருமாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் சிக்கல் நிறைந்த மருத்துவத் தேவைகள் உள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லத் தேவை இருக்காது.

“நிபுணர்கள்தான் தங்கள் மருத்துவத் தேவைகளைக் கவனிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நோயாளிகளிடமும் உள்ளது,” என்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மருத்துவர்களுக்கும் அத்தகைய பொறுப்புகளுக்கு ஏற்ப பயிற்சிகள் அளிக்கவேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்