தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகளவில் காது கேளாதோருக்கான கருவிகளில் ஏழில் ஒன்று சிங்கப்பூரில் தயாரிக்கப்படுகின்றன

2 mins read
7bc1ad33-394e-49cf-a68e-8dc9a1647ec9
‘டபிள்யுஎஸ் ஆடியோலஜி சிங்கப்பூர்’ன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒலியியல் பொறியியலாளர் டிரெவர் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

உலகளவில் அணியப்படும் காது கேளாதோருக்கான கருவிகளில் ஏழில் ஒன்று சிங்கப்பூரில் உள்ள 18 தை செங் ஸ்திரீட்டில் தயாரிக்கப்படுகின்றன.

காது கேளாதோருக்கான கருவிகளில் செய்யப்படும் புத்தாக்கங்களும் அதே இடத்திலிருந்துதான் வருகின்றன.

அத்தகைய கருவிகளுக்கான முன்னணி விநியோகிப்பாளர், ‘டபிள்யுஎஸ் ஆடியோலஜி’ன் வட்டாரத் தலைமையகமும் அங்குதான் அமைந்துள்ளது.

“‘டபிள்யுஎஸ் ஆடியோலஜி சிங்கப்பூர்’ன் செயல்பாடுகள், நமது உலக உற்பத்தி, விநியோகக் கட்டமைப்பின் அடித்தளமாக உள்ளன. காது கேளாதோருக்கு உலகளவில் நாம் விற்கும் அனைத்துக் கருவிகளிலும் பாதிக்கும் மேல் சிங்கப்பூரில் தயாரிக்கப்படுகின்றன,” என்று ஆசிய பசிபிக்கிற்கான நிறுவனத்தின் வட்டாரத் தலைவர் ஒலிவியர் சுப்பின் கூறினார்.

நிறுவனத்துக்காக பொருள் புத்தாக்கம், தானியக்கமயமாதல், மின்னிலக்கமயமாதல் ஆகியவற்றிலும் அது பங்கு வகித்துள்ளது.

இன்று இங்கு தயாரிக்கப்பட்ட காது கேளாதோருக்கான கருவிகளை உலகம் முழுதும் மில்லியன்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

பல்லாண்டுகளாக, இங்குள்ள 200 பேர் கொண்ட ஆய்வு, மேம்பாட்டுக் குழு, காது கேளாதோருக்கான உலகின் முதல் கம்பியில்லா கருவியைத் தயாரித்தது. அது 2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

2020ஆம் ஆண்டில், காது கேளாதோருக்கான உலகின் முதல் கையடக்க ‘சி’ மின்னேற்றியை இங்குள்ள குழுவினர் உருவாக்கினர்.

நீண்ட மின்கல ஆயுளுடன் கூடிய மேம்பட்ட, மேலும் சிறிய கருவிகளைத் தயாரிப்பதில் குழு செயல்பட்டு வருகிறது.

‘டபிள்யுஎஸ் ஆடியோலஜி’ 2019ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், அது ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட அத்தகைய கருவிகளை விற்பனை செய்கிறது.

காது கேளாதோருக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நிறுவனமாக அது திகழ்கிறது.

உலக மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், உலகளவில் அத்தகைய கருவிகளுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்