சிங்கப்பூரின் மின்சிகரெட்டுப் பிரச்சினையைக் கையாள்வதற்கு இடைக்கால நடவடிக்கையாக, இணைந்த எட்டோமிடேட் என்ற போதைப்பொருளை போதைப்பொருள் புழக்கச் சட்டத்தில் சேர்க்க சுகாதார அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவை செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
தோற்றமயக்கம், உடல் உறுப்புச் சிதைவு ஆகியவற்றை நச்சுத்தன்மைமிக்க வேதிப்பொருள் ஏற்படுத்துகிறது.
மின்சிகரெட்டுகளில் மூன்றில் ஒன்று எட்டோமிடேட்டைக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள மின் சிகரெட்டுகள் காண்பிப்பதாகத் திரு ஓங் கூறினார்.
போதைப்பொருள் புழக்கச் சட்டத்தில் எட்டோமிடேட் சேர்க்கப்பட்டதன் விளைவாக, போதைப்பொருள்களை வைத்திருப்பவர்கள், அதைப் பயன்படுத்துபவர்கள், விற்பவர்கள் ஆகியோர் கஞ்சா போன்ற போதைப்பொருள்களை வைத்திருப்பவர்களைப் போல நடத்தப்படுவர்.
செம்பவாங்கில் நடைபெற்ற செல்லப்பிராணிகளுக்கான நாய் ஓட்ட நிகழ்ச்சி இடையே செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் ஓங், புதிய செயலாக்கத்திற்காகச் சுகாதார அமைச்சு, உள்துறை அமைச்சுடன் இணைந்து செயல்படும் எனத் தெரிவித்தார்.
சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்க விரும்புவோருக்குத் தங்கள் தொலைபேசி சேவை நேரத்தை நீட்டிக்க விரும்புவதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
குற்றக் கும்பல்களால் விற்கப்பட்டு வருவதாகக் கூறும் கேபோட்ஸ் மீது உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சிகரெட்டுகளை வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது வாங்குவது குற்றமாகும். குற்றம் புரிவோருக்கு $2,000 அபராதம் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றை முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ விற்பவர்கள், இறக்குமதி செய்பவர்கள் அல்லது விநியோகம் செய்பவர்கள் ஆறு மாதம் வரை சிறையிலிடப்படுவதுடன் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
மின்சிகரெட்டுக் குற்றச்செயல்கள் குறித்துப் புகார் அளிக்க விரும்புவோர், www.go.gov.sg/reportvape என்ற புதிய இணையப் புகார் படிவம் வழியாகவும் புகையிலை விதிமுறை கிளை எண் 6684 2036 அல்லது 6684 2037 வழியாகவும் இதனைச் செய்யலாம்.