இணையவழி ஜைரோ விண்ணப்பம்: 2 மி. வரி செலுத்துவோர் பயனடைவர்

இணையவழி ஜைரோ விண்ணப்பம்: 2 மி. வரி செலுத்துவோர் பயனடைவர்

1 mins read
66169f51-eb3b-4bac-8461-3331a3a9d267
படம்: - சாவ்பாவ்

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் டிபிஎஸ் வங்கியும் இணைந்து தொடங்கிய சேவையின் மூலம் வரி செலுத்துவோரில் கூடுதலானோர் இனி ஜைரோ மூலம் இணையம் வழி வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தை இணையத்தில் சமர்ப்பிக்கலாம்.

‘இஜைரோ’ (eGIRO)எனப்படும் இந்தச் சேவையின் மூலம் தனிநபர்கள், வர்த்தகங்கள் ஆகிய இருவரும் ஆணையத்தின் ‘மை டாக்ஸ்’ (myTax) இணையவாசலின் மூலம் தங்கள் வரியைத் தானியங்கி முறையில் செலுத்த முடியும்.

இதன்மூலம், சிங்கப்பூரில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஜைரோ பயனர்கள் பயனடைவர் என எதிர்பார்ப்பதாக டிபிஎஸ் வங்கியும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்