தீமிதித் திருவிழாவிற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம்

1 mins read
d9e03de4-e1ff-49d5-80e1-1567da5029fd
ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா காட்சிகள். - படம்: தமிழ் முரசு

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடன்களைச் செலுத்த இணையவழி முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள  தீமிதித் திருவிழா தொடர்பிலான பால்குடம், அங்கப் பிரதட்சணம், கும்பிடுதண்டம், தீமிதித்தல், தீக்குழிச் சுற்றுதல் உள்ளிட்ட அனைத்து நேர்த்திக்கடன்களுக்கும் இணையவழியில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் கோயிலில் நேரடி முன்பதிவு கிடையாது என்றும் இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது. 

பக்தர்கள் செப்டம்பர் 10ஆம் தேதிமுதல் அக்டோபர் 19ஆம் தேதிவரை இணையம்வழி பதிவுசெய்யலாம்.

பக்தர்கள் பால்குடம், அங்கப் பிரதட்சணம், கும்பிடுதண்டம் ஆகிய நேர்த்திக்கடன்களை அக்டோபர் 5ஆம் தேதி சனிக்கிழமை முதல் மேற்கொள்ளலாம். அவற்றுக்கு முன்பதிவு செய்யுமுன் உரிய விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளும்படி வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

தீமிதித் திருவிழாவன்று ஆண் பக்தர்களுக்கான பாத ஊர்வலம் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தொடங்கி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நிறைவடையும்.

முன்பதிவிற்கான இணைப்பு: https://heb.org.sg/fw2024/

குறிப்புச் சொற்கள்