ஜூன் மாதப் பள்ளி விடுமுறை காலம் தொடங்கிவிட்டாலே, குழந்தைகளை எங்கு கூட்டிச் செல்வது, எப்படி பயனுள்ளதாக நேரத்தைக் கழிப்பது என்ற சிந்தனை பெற்றோர்களுக்கு வந்துவிடும். தற்போதைய சூழலில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நம் சிங்கப்பூரிலேயே அதிகப் பணம் செலவழிக்காமல் வரவுசெலவுக்கு ஏற்றபடி குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய 6 சிறந்த வழிகளை ‘தப்லா’ இதழ் தொகுத்து வழங்கியுள்ளது.
1. கேம் டிராகன் படகு சவாரி
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், சிங்கப்பூர் டிராகன் படகுச் சங்கம் இணைந்து நடத்தும் இந்த 2 நாள் பயிற்சி முகாம் முற்றிலும் இலவசமானது.
- சிறப்பம்சம்:
சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மூலம் துடுப்பு போடுதல், பந்தயத்தின் அடிப்படைகள் கற்றுத்தரப்படும். பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழும் உண்டு.
- நேரம்: மதியம் 2:30 மணி முதல் 5:30 மணி வரை.
யாருக்கு? 13 முதல் 24 வயதுடைய சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசக் குடியுரிமை பெற்ற இந்திய இளையர்களுக்கு.
இடம்: சிண்டா தலைமையகம் 1 பீட்டி ரோடு.
2. ‘வென் தி வேர்ல்ட் டான்சஸ்’ நாடகம்
இந்தியாவின் ‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ நடனக் கலைஞர்கள், சிங்கப்பூர் இசையமைப்பாளர் ராகவேந்திரன் ராஜசேகரன் ஆகியோரின் நேரடி இசையமைப்பில் உருவாகும் இருமொழி (ஆங்கிலம் & பிரெஞ்சு) நாடகம் இது.
- சிறப்பம்சம்
இந்தியா, ஜிம்பாப்வே, பனாமா ஆகிய நாடுகளின் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளை நடனம் மற்றும் இசை மூலம் காட்சிப்படுத்துகின்றனர். இதற்கான கட்டணம்: $32.54
இடம்: அலையன்ஸ் ஃபிரான்சைஸ் அரங்கம் (Alliance Francaise Theatre).
தொடர்புடைய செய்திகள்
சிறார்களுக்கான கல்வி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மாபெரும் கண்காட்சி.
- சிறப்பம்சம்:
70க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், முன்னணி கல்வி மேம்பாட்டு மையங்கள் இதில் பங்கேற்கின்றன. அறிவியல், கலை, விளையாட்டு சார்ந்த பல விஷயங்களை ஒரே இடத்தில் பிள்ளைகள் விளையாடியபடியே கற்றுக்கொள்ளலாம்.
கட்டணம்: இலவசம்
இடம்:சன்டெக் கன்வென்ஷன் ஹால் 404.
4. கடற்கரையில் திரைப்படங்கள் (மூவிஸ் பை தி பீச்)
செந்தோசாவின் ‘ஃபேமிலி ஃபெஸ்ட்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திறந்தவெளித் திரைப்படக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சிறப்பம்சம்:
வார இறுதி நாட்களில் மாலை 5:30 மற்றும் இரவு 7:30 மணிகளுக்குப் பிரபலமான அனிமேஷன் திரைப்படங்கள் திரையிடப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் கைவினைப் பொருள்கள் அரங்குகளும், ஆடம்பர ஆடைப் போட்டிகளும் நடைபெறும்.
கட்டணம்: இலவசம்
இடம்: பலவன் கிட்ஸ் சிட்டி ரூஃப் கார்டன்
5. கெட் கியூரியஸ்! ஆல் அபௌட் தி ரிவர் கண்காட்சி
‘சில்ட்ரன்ஸ் சீசன்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம் இதனை நடத்துகிறது.
- சிறப்பம்சம்:
3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புக் கண்காட்சிகள். சிங்கப்பூர் ஆறு எவ்வாறு ஒரு சிறிய தீவிலிருந்து உலகளாவிய பசுமை நகரமாக மாறியது என்பதை ஊடாடும் விளையாட்டுகள் மூலம் பிள்ளைகள் தெரிந்துகொள்ளலாம்.
கட்டணம்: இலவசம்
இடம்: சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம்
6. சம்மர் பிளேகிரவுண்ட்
‘எஸ்ஜி எனேபிள்’, மற்றும் ‘ஜங்ஆண்ட்ஃபாக்ஸ் ஹக்லிங்ஸ்’ இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு, உள்ளார்ந்த சமுதாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
- சிறப்பம்சம்:
உடற்குறையுள்ளோர் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுடன் இணைந்து விளையாடுவதற்கான சூழல் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் வரும் 500 பார்வையாளர்களுக்கு இலவசப் பரிசுப் பைகள் வழங்கப்படும்.
கட்டணம்: இலவசம்
இடம்: எனேப்ளிங் வில்லேஜ்

