கான்கார்ட் ஹோட்டல் மற்றும் கடைத்தொகுதியில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலை நடந்த மோதலில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். அச்சம்பவத்தின்போது ரொட்டி நறுக்கும் கத்தியை வைத்திருந்ததாக 32 வயது ஆடவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸுர்ஃபகார் முஸ்லி, பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக செவ்வாய்க்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் மீதான வழக்கு செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 10க்கு மேற்பட்டோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான முகமது ஸக்காரி டேனியல் முகமது அஸார், 22, பொது இடத்தில் மூன்று கத்திகளை வைத்திருந்ததாகவும், முகமது ஷாருல்நிஸாம் ஒஸ்மான் எனும் ஆடவர் மற்றோர் ஆடவரைக் கத்தியால் தாக்க உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.