ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை: குற்றவாளியின் மேல்முறையீடு நிராகரிப்பு

1 mins read
efb328ae-170f-41ef-937e-528420d2da67
சம்பவம் பதிவான கண்காணிப்பு கேமரா காணொளி. - காணொளிப் படம்: நீதிமன்ற ஆவணங்கள்

கடந்த 2019ஆம் ஆண்டு ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதியில் நடந்த கொலையில் குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (மே 15) நிராகரித்தது.

குற்றவாளியான டான் சென் யாங்கிற்கு ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. இப்போது அவருக்கு வயது 33.

ஆர்ச்சர்ட் டவர்சில் மூண்ட சண்டையில் அந்தக் கொலை நடந்தது. சென்ற ஆண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவர் குற்றவாளி என்று நிரூபணமானது.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சண்டையில் 31 வயது சதீ‌ஷ் நோவெல் கோபிதாஸ் எனும் ஆடவர் கொல்லப்பட்டார். திரு சதீ‌ஷின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு அவர் உயிரிழந்தார்; அக்குற்றத்தை டான் புரிந்தது நிரூபிக்கப்பட்டது.

டான், கரம்பிட் வகை கத்தியை வைத்துக்கொண்டு, கையால் மூன்று முறை குத்தியதால் திரு சதீ‌ஷ் கொல்லப்பட்டார்.

டானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மாற்றப்படாது என நீதிபதிகள் டே யோங் குவாங், பெலிண்டா ஆங், வூ பீ லி ஆகியோர் வியாழக்கிழமையன்று தீர்ப்பளித்தது. டானின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதத்தை அந்த நீதிபதிகள் மூவரும் மறுத்தனர்.

குறிப்புச் சொற்கள்