மலேசியப் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில், கரையோரப் பூந்தோட்டங்களில் புதிய ஆர்க்கிட் மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள மலர்மாடத்தில் (flower dome) மலேசியக் கட்டட வடிவங்களுக்கும் கலாசாரக் கலைப்பொருள்களுக்கும் இடையே 600க்கும் அதிகமான ஆர்க்கிட் மலர்கள் அணிவகுத்துள்ளன.
பெர்சோனா அங்கெரிக் என்ற கருப்பொருளில் அமைந்துள்ள கண்காட்சிக்கு சிங்கப்பூருக்கான மலேசியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. அது சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவைப் பறைசாற்றுகிறது.
சிங்கப்பூருக்கான மலேசியத் தூதரக ஆணையர் டாக்டர் அஸ்ஃபர் முகமது முஸ்தஃபார், கரையோரப் பூந்தோட்டங்கள் இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோருடன் கண்காட்சியைத் திறந்துவைத்தார்.
மெடிட்டரேனியன் தோட்டத்தில் அமைந்துள்ள கண்காட்சி 15 விதமான கலப்பில்லாத, கலப்புடைய ஆர்க்கிட் மலர்களைக் காட்சிப்படுத்துகிறது.
கிளந்தானின் நிலா பட்டம், பாஹாங்கின் துணிமணி, சரவாக் ஓராங் லூலூவின் பாரம்பரிய உடை ஆகியவை மலர்க் கண்காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
கண்காட்சி செப்டம்பர் 7ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை நடைபெறும்.