‘முத்திரை இல்லாத பான விற்பனையை நிறுத்த சாடியா பேராங்காடிக்கு உத்தரவு

‘முத்திரை இல்லாத பான விற்பனையை நிறுத்த சாடியா பேராங்காடிக்கு உத்தரவு

படங்கள்: கம்பிளைன்ட் சிங்கப்பூர், ஃபேஸ்புக்

21 Nov 2026 - 5:24 pm

1 mins read

சிங்கப்பூரில் பானக் கலனைத் திரும்பத் தரும் திட்டத்திற்கான முத்திரை இல்லாமல் ரெட் புல் பானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று துவாசில் உள்ள சாடியா பேரங்காடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாடியா பேரங்காடியால் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் ‘ரெட் புல்’ பானங்களில் திட்டத்திற்கான முத்திரை இல்லை என்பது குறித்துத் தெரியும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு சனிக்கிழமை (நவம்பர் 21) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

முத்திரை இல்லாத பானங்களை விற்றுமுடிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கும்படி சிறிய சில்லறை வர்த்தகக் கடைகளும் லாப நோக்கமற்ற அமைப்புகளும் தேசியச் சுற்றுப்புற அமைப்பிடம் விண்ணத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆனால், சாடியா பேரங்காடி கூடுதல் அவகாசத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என்று அமைப்பு சுட்டியது.

அதுதொடர்பில் முத்திரை இல்லாத பானக் கலன்களின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும் தொடர்ந்து விற்பனை செய்தால் பேரங்காடி எதிர்கொள்ளவேண்டிய பிள்விளைவுகளையும் குறித்து நினைவூட்டியிருப்பதாக அமைப்பு சொன்னது.

உத்தரவுக்கு இணங்கிய சாடியா பேரங்காடி முத்திரை இல்லாத பானங்களைக் கடையிலிருந்து அகற்றியதாகவும் அது குறிப்பிட்டது.

பானக் கலன்களைத் திரும்பத்தரும் திட்டத்தின்கீழ் 150 மில்லிலிட்டரிலிருந்து மூன்று லிட்டர் வரையிலான பானங்களைக் கொண்டுள்ள பிளாஸ்டிக், ஈயக் கொல்கலன்களில் 10 காசு முன்பண முத்திரை இருக்கவேண்டும்.

அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து அந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டது.

முத்திரை இல்லாத பானங்களைக் கடைகள் விற்பனை செய்ய முடியாது.

குறிப்புச் சொற்கள்