ஒரே நாளில் 235,000 பேர் எல்லைகளைக் கடந்தனர்

ஒரே நாளில் 235,000 பேர் எல்லைகளைக் கடந்தனர்

1 mins read
568acaff-4bd2-468b-8b2b-54b88f49907e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவுடனான எல்லைகள் முழுமையாகத் திறக்கப்பட்ட பிறகு ஏராளமானோர் சிங்கப்பூரை விட்டு வெளியேறியதால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த புனித வெள்ளி நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 6ஆம் தேதி உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூரிலிருந்து 235,000க்கும் மேற்பட்டோர் வெளியேறினர்.

கொள்ளை நோயிலிருந்து மீண்டு வந்த சிங்கப்பூர் ஓராண்டுக்கு முன்பு மலேசியாவுடனான எல்லை களைத் திறந்தது. கடந்த வியாழக் கிழமை மதிய நேரத்தில் இருந்து போக்குவரத்து அதிகரித்தது.

இரு சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று தெரிவித்தது.

ஏப்ரல் 6ஆம் தொடங்கி 9ஆம் தேதி வரையிலான நீண்ட வார இறுதியில் நிலம் வழியாக இரு சோதனைச் சாவடிகளையும் 1.4 மில்லியன் பயணிகள் கடந்து சென்றதாகவும் அது கூறியது.

ஏப்ரல் 7ஆம் தேதி புனித வெள்ளி நாளாகும். ஏப்ரல் 5ஆம் தேதி சிங் மிங் பண்டிகை தொடங்கியது என்று ஆணையம் சுட்டிக்காட்டியது.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு புனிதவெள்ளி வார இறுதியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்து சென்றனர்.

தற்போதைய எண்ணிக்கை, கொள்ளைநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது. பயணிகள் எளிதாகச் செல்லவும் நெரிசலைக் குறைக்கவும் பல முன்னெச்ச சரிக்கை நடவடிக்கைளை ஆணையம் எடுத்திருந்தது.

குறிப்புச் சொற்கள்