தமது வாழ்க்கை வழிகாட்டியைப் பார்க்க வேண்டும் என்று கூறிய பெண்ணை அவரது காதலர் அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணை முதலில் கம்பு ஒன்றால் தாக்கிய ஆடவர் பின்னர் அப்பெண்ணை நிர்வாணமாகக் கட்டி வைத்தார்.
அதன்பின்னர் அந்த 30 வயது ஆடவர் பெண்ணின் தொடையில் ரம்பத்தைக் கொண்டு வெட்டினார். பின்னர் மரசுத்தி ஒன்றால் பெண்ணின் தலையைத் தாக்கினார்.
அடித்துத் துன்புறுத்திய பிறகு ஆடவர் நிர்வாணமாகக் கட்டிவைக்கப்பட்ட அப்பெண்ணைக் காணொளியும் எடுத்தார்.
இந்தத் துன்புறுத்தல் சம்பவம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெம்பனிஸில் உள்ள அந்த ஆடவரின் வீட்டில் நடந்தது.
ஆடவரின் குற்றச்செயலுக்காக அவருக்கு 7 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 191 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு 9 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
ஆடவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிநபர் விவரங்களைக் காக்கும்விதமாகக் குற்றவாளியின் பெயர் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர் அந்த ஆடவர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காகத் தண்டனை விதிக்கப்பட்டது.

