பாகிஸ்தான் வெள்ளம்: நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் அரசு

1 mins read
56461801-c1d9-4106-93e9-e0b5d4f9800f
பஞ்சாப் மாநிலத்தில் 2,300க்கும் அதிகமான கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.   - படம்: இபிஏ

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாகச் சிங்கப்பூர் செஞ்‌சிலுவை சங்கம் நிதி திரட்டி வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசாங்கம் செஞ்‌சிலுவை சங்கத்திற்கு 50,000 அமெரிக்க டாலர் (64,000 வெள்ளி) வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) அறிக்கை வெளியிட்டுள்ளது.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க செஞ்சிலுவைச் சங்கம் நிதி திரட்டுகிறது. அதற்கு உதவும் விதமாக அரசாங்கம் 64,000 வெள்ளி கொடுக்கிறது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“வெள்ளத்தால் மாண்டவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றும் வெளியுறவு அமைச்சு கூறியது.

இவ்வாண்டு பாகிஸ்தானில் பெய்த பருவ மழையால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மாண்டனர்.

ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கைபர் பக்துன்குவா வட்டாரத்தில் சில நாள்கள் பெய்த கனத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் மட்டும் 4,00க்கும் அதிகமான பாகிஸ்தான் மக்கள் மாண்டனர்.

கிழக்குப் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அந்நாட்டு மீட்புப்படையினர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தெரிவித்தனர்.

வெள்ளத்தால் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் 2,300க்கும் அதிகமான கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்