சிங்கப்பூர் இயந்திரவியல் விழாவில் பாலஸ்தீன இளையர்கள் பங்கேற்பு

சிங்கப்பூர் இயந்திரவியல் விழாவில் பாலஸ்தீன இளையர்கள் பங்கேற்பு

1 mins read
04a099ac-5d6c-43dc-9de4-1066093d448a
பாலஸ்தீனியப் போட்டியாளர்களான ரசான் ஷாவார் (மையத்தில்), ஜிஹாத் அபுதய்யே (இடது), முஸ்தபா அஸ்ஸி ஆகியோர் இயந்திரவியல் போட்டியில் பங்கேற்கின்றனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பாலஸ்தீன மாணவி ரஸான் ஷாவார், சிங்கப்பூரில் நடந்த உலக இயந்திரவியல் ஒலிம்பியாட் போட்டியில் தமது குழுவின் படைப்புகளை முன்னிறுத்தியுள்ளார். 

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தம் படைப்பைக் காண்பிக்கச் சிங்கப்பூருக்கு அவர் மேற்கொண்டிருந்த பயணம், 24 மணி நேரம் நீடித்தது.

பாலஸ்தீனம் போருக்கன்றி புதுமைக்குப் பெயர்போனதாக இருக்க வேண்டும் என்பது இந்த 15 வயது இளையரின் விருப்பம். 

இஸ்ரேல் நிர்வகிக்கும் மேற்குக் கரையின் ரமல்லாவைச் சேர்ந்த 15 வயது உயர்நிலைப் பள்ளி மாணவியான ரஸான், பாலஸ்தீனர்களுக்கு நற்பெயரைத் தரும் வகையில் ஏதேனும் பெரிதான ஒன்றை உருவாக்கக் கனவு காண்பதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற மூன்று நாள் அனைத்துலக இயந்திரவியல் போட்டி, நவம்பர் 28ல்  நிறைவடைந்தது. பாலஸ்தீனப் பிரதிநிதிகள் கொண்ட குழுவினருடன் சேர்ந்து அவர், மேற்குக்கரையிலிருந்து ஜோர்டான் மற்றும் துபாய் வழியாகப் பயணம் செய்தார்.

90க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தும் குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தும் 1,500க்கும் அதிகமான போட்டியாளர்கள், தற்காலச் சவால்களுக்குத் தீர்வுகளைக் கண்டறியும் நோக்கில் ஒன்றுகூடினர்.

ஏஎஃப்பியின் கணக்கின்படி, மலேசியா இப்போட்டியில் தனது திறமையை முத்திரை பதித்து, பல்வேறு பிரிவுககளுக்கான பதக்கங்களில் மூன்றில் ஒரு பகுதியை வென்றது.

ஹாங்காங், கோஸ்டாரிக்கா, கனடா மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளும் முதலிடத்திற்கான விருதுகளைப் பெற்றன.

பதக்கங்கள் எதுவும் இல்லாமல் திரும்பினாலும் உலக அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்த வெற்றியுடன் பாலஸ்தீன மாணவர்கள் நாடு திரும்பினர். 

குறிப்புச் சொற்கள்