மும்முனை போட்டி நிலவிய ராடின் மாஸ் தனித்தொகுதியைத் தக்கவைத்த மசெக

2 mins read
94fdbb9f-5d7d-4f94-99d1-60a7c8bedaeb
ராடின் மாஸ் தனித்தொகுதியிலிருந்து திரு மெல்வின் யோங் இரண்டாம் முறையாகத் தேர்வுபெற்றுள்ளார். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவிய ராடின் மாஸ் தனித்தொகுதியை ஆளும் மக்கள் செயல் கட்சி தக்கவைத்துள்ளது.

மசெக வேட்பாளர் திரு மெல்வின் யோங் 69.17 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சீர்திருத்த மக்கள் கட்சியின் வேட்பாளர் திரு குமார் அப்பாவு 7.36 விழுக்காடு வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் திரு டேரல் லோ 23.47 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர்.

சனிக்கிழமை (மே 3) அன்று தேர்தல் வாக்களிப்பு எட்டு மணிக்கு நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 10 மணியிலிருந்து மாதிரி வாக்கு எண்ணிக்கை விவரம் வெளியாகத் தொடங்கியது.

மாதிரி வாக்கு எண்ணிக்கையில் மசெக வேட்பாளர் திரு மெல்வின் யோங் 69 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். சுயேச்சை வேட்பாளர் திரு டேரல் லோ 24 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் சீர்திருத்த மக்கள் கூட்டணி வேட்பாளர் திரு குமார் அப்பாவு 7 விழுக்காடு வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

திரு குமார் கடந்த 2015, 2020 பொதுத் தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு இருமுறையும் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராடின் மாஸ் தனித்தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 25,497.

இத்தொகுதியை மசெகவிற்காக வென்றுகொடுத்துள்ள திரு யோங், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியிலிருந்து முதன்முறையாக 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் அவர் ராடின் மாஸ் தொகுதியில் 74.01 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

குறிப்புச் சொற்கள்