எட்டு மாதக் குழந்தை மரணம்: பெற்றோர் மீது குற்றச்சாட்டு

எட்டு மாதக் குழந்தை மரணம்: பெற்றோர் மீது குற்றச்சாட்டு

1 mins read
0ab96680-eb85-4359-86e1-f123aa892aae
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்களின் எட்டு மாத மகனின் மரணத்துடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பெற்றோர் கைதுசெய்யப்பட்டனர்.

நியோ ஜியா மிங் எனும் 25 வயது ஆடவரையும் குலோவி கான் சி சூவான் எனும் 21 வயது பெண்ணையும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 3) கைதுசெய்தனர். டிரெவர் நியோ எனும் தங்கள் குழந்தை இறக்கக் காரணமாக இருந்ததாக செவ்வாய்க்கிழமையன்று குலோவி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குழந்தையைப் பாதுகாக்கத் தவறியதாக தந்தை நியோ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நியோ, தனது மகனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று நம்பப்படுகிறது. அந்தத் தம்பதி ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 1) ஹவ்காங்கில் உள்ள தங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில் அக்குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. எந்த சூழ்நிலையில் டிரெவர் மாண்டார் என்பது குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.

பெற்றோர் இருவரின் வழக்குகளும் இம்மாதம் 24ஆம் தேதியன்று நீதிமன்ற விசாரணைக்கு வரும்.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் குழந்தை இறந்தது குறித்து திங்கட்கிழமை (செப்டம்பர் 2) அதிகாலை ஒரு மணிக்கு முன்பு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்பில் குழுந்தையின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்