சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு சரியான பள்ளியைத் தேர்ந்தெடுக்க பெற்றோர் முயற்சி

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு சரியான பள்ளியைத் தேர்ந்தெடுக்க பெற்றோர் முயற்சி

2 mins read
26b6773c-6e79-4c11-a154-75a9d1d38b22
ஆண்டுதோறும் சராசரியாக 200 மாணவர்கள் சாதாரணப் பள்ளிகளிலிருந்து சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்கு மாறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர், பொதுவாகப் பலருக்குப் பழக்கப்பட்ட கல்வி முறைக்குப் பதிலாக சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டியது குறித்து ஆலோசிப்பதுண்டு.

அவ்வாறு செய்யும்போது அத்தகைய கல்வி தொடர்பில் சமூகத்தில் இருக்கக்கூடிய தவறான கண்ணோட்டத்தை எதிர்கொண்டு நடவடிக்கையில் இறங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. சிங்கப்பூரில் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகள் உள்ள பெற்றோர் அதிகமானோர் நடப்பில் இருக்கும் கல்வி முறையைக் கருத்தில்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கென சில தேவையான, மாறுபட்ட முடிவுகளை எடுக்கவேண்டிய சூழலை எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில், தங்களின் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்குப் பள்ளிகள் தகுந்த ஆதரவு தருவதாக சில பெற்றோர் கூறுகின்றனர். அதேவேளை, போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் வேறு சிலர் கூறுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள் காட்டும் போக்கு

சாதாரண பள்ளிகளுக்கும் சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்கும் இடையே (SPED) மாறிய மாணவர்களின் புள்ளிவிவரங்களைக் கல்வி அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் முதன்முதலில் வெளியிட்டது. எல்லா வகையினரும் பதிவுசெய்ய ஒருங்கிணைக்கப்பட்ட தளம் 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அப்புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.

ஆண்டுதோறும் சராசரியாக 200 மாணவர்கள் சாதாரணப் பள்ளிகளிலிருந்து சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்கு மாறியது புள்ளிவிவரங்களில் தெரியவந்தது. அவர்களில் 90 விழுக்காட்டினர் தொடக்கநிலைக் கல்வியின்போது மாறிக்கொண்டனர். அந்த மாணவர்களில் 70 விழுக்காட்டினர் மூளைத்திறன் குறைபாடுகள் உள்ளவர்கள்.

அதேவேளை, கிட்டத்தட்ட 159 மாணவர்கள் சிறப்புக் கல்விப் பள்ளிகளிலிருந்து சாதாரணப் பள்ளிகளுக்கு மாறிக்கொண்டனர். அவர்களில் 90 விழுக்காட்டினர் உயர்நிலைக் கல்வியின்போது மாறிக்கொண்டனர். சிறப்புக் கல்விப் பள்ளிகளிலிருந்து சாதாரண பள்ளிகளுக்கு மாறிக்கொண்டோரில் 10ல் எழுவர் தொடர்புத் திறன் குறைபாடு உள்ளவர்கள்.

“மாணவர்களின் கற்றல் தேவைகள் காலப்போக்கில் உருமாறி மறுவடிவம் பெறும். எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு அவை அமையும்,” என்றது கல்வி அமைச்சு. “ஒரு மாணவருக்கு நல்ல ஆதரவு கிடைத்து அவர் சாதாரண பள்ளிக்கு மாறிக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்று பெற்றோரும் சிறப்புக் கல்விப் பள்ளிகளும் நினைத்தால் கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்பட்டு மாற்றத்துக்கு ஏற்பாடு செய்யலாம்,” என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கல்விசிறப்புத் தேவைமாணவர்பள்ளி