தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸா நெருக்கடி, ரயில் போக்குவரத்து பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்

1 mins read
bce5abf6-16d9-4453-ac76-2a80f15c1c73
சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) நாடாளுமன்றம் கூடவிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் காஸாவில் தொடரும் நெருக்கடி, அண்மைக் காலமாக ரயில் போக்குவரத்தில் ஏற்படும் தடங்கல்கள், மின்சிகரெட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

அதிபரின் தொடக்க உரை தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய 125 கேள்விகள் தொடர்பாகவும் மன்றத்தில் விவாதிக்கப்பட்டும்.

பள்ளிகளில் நடக்கும் துன்புறுத்தல் சம்பவம், இணையக் கட்டமைப்பில் நடக்கும் தாக்குதல் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் விளக்கம் தரும். இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.

அதேபோல், செப்டம்பர் 5ஆம் தேதி அதிபர் தர்மன் சண்முகரத்னம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய தொடக்க உரையில் புதிய அரசாங்கத்தின் திட்டங்கள், முன்னுரிமைகள் குறித்துக் கேட்டிருந்தார். அதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதில் தருவார்கள்.

காஸா தொடர்பாக ஆறு கேள்விகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலஸ்தீனம் தொடர்பாகச் சிங்கப்பூரின் நிலைப்பாடு, காஸாவுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் குறித்த மேல்விவரங்கள் போன்றவை கேள்விகளில் அடங்கும்.

காஸா தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன், வெளியுறவு மூத்த அமைச்சர் சிம் ஆன், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் ஆகியோர் பதில் தருவார்கள்.

இந்நிலையில், ரயில் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து ஆறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதேபோல் மின்சிகரெட்டுகள் தொடர்பாக 11 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்